For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவா, பீகாரில் காங், ஆர்ஜேடி ஆட்சி அமைக்க உரிமை கோரின.. ஆளுநருடன் சந்திப்பு

கோவா மற்றும் பீகாரில் ஆட்சி அமைக்க உரிமை கோரி முறையே காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கோவா, பீகாரில் காங், ஆர்ஜேடி ஆட்சி அமைக்க உரிமை கோரின- வீடியோ

    டெல்லி: கோவா மற்றும் பீகாரில் ஆட்சி அமைக்க உரிமை கோரி முறையே காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளது. தாங்கள்தான் தனிப்பெரும் கட்சி என்று கூறி இவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

    கர்நாடகாவில் பாஜக 104 இடங்கள் பெற்று இருந்த போதிலும் அந்த கட்சி அதிக இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக இருக்கிறது என்று அம்மாநில ஆளுநர் வாஜுபாய் வாலா பாஜக கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். காங்கிரஸ்-மஜத சுயேட்சைகள் சேர்ந்து 118 பேர் இருந்தும் அவர்கள் தனிப்பெரும் கட்சி கிடையாது என்று கூறி, ஆளுநர் அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    Congress and RJD meets governor in Goa and Bihar respectively for right to set up the regime

    கர்நாடக மாநில ஆளுநர் கொடுத்த இந்த விளக்கத்திற்கு இன்று உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. ஆனால் அதே சமயம், அந்த ஆளுநர் செய்த அதே விதிமுறையை பயன்படுத்தி மற்ற மாநிலங்களில் அதிக இடங்களில் வென்ற கட்சிகள் போர் கொடி தூக்கியுள்ளது. காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் போர் கொடி தூக்கியுள்ளது.

    தற்போது பீகாரில் அதிக இடங்களை பிடித்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி மற்ற சில கூட்டணி கட்சிகள் மற்றும் காங்கிரஸுடன் சேர்ந்து அம்மாநில கவர்னர் சத்யபால் மாலிக்கை சந்தித்துள்ளனர். நாங்கள்தான் இந்த மாநிலத்தில் அதிக இடங்களை பெற்ற தனிப்பெரும் கட்சி என்று கூறி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர். எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அவர்கள் அளித்துள்ளனர்.

    அதேபோல் 13 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டாக சென்று, கோவாவில் நாங்கள்தான் தனிப்பெரும் கட்சி என்று கோவாவில் ஆட்சி அமைக்க அழைக்கும் படி கோவா கவர்னர் மிருதுளா சின்ஹாவிடம் அளித்துள்ளனர். இந்த இரண்டிலும் ஆளுநர்கள் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த தொடர் அதிரடிகள் இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    13 Congress MLAs at Raj Bhavan, hand over memorandum to Governor Mridula Sinha saying Congress is the single largest party in the Goa state. RJD and other alliance parties-Congress and CPI(ML) hand over letters to Governor Satyapal Malik stating that RJD is the single largest party hence should be invited to form Government
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X