இது காங்கிரஸ் ஸ்டைல்.. இதுவும் மோடியின் 100 நாள் சாதனைதானாம்!!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமர் மோடி பதவியேற்று 100 நாட்களாகிவிட்ட நிலையில் பாஜக மோடி சர்க்காருக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கிறது. இதற்கு பதிலடியாக காங்கிரஸும் "மோடியின் 100 நாட்கள் சாதனைகள் இதுவும்தான் பாரீர்!" என்று பெரும் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்து நேற்று முன் தினத்துடன் 100 நாட்கள் நிறைவடைந்துவிட்டன. இதனையொட்டி 100 நாட்களில் மோடி அரசின் சாதனைகள் என்று பக்கம் பக்கமாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பாஜக புகழ் பரப்பிக் கொண்டிருக்கிறது.
இதற்குப் போட்டியாக காங்கிரஸும் முன்வைத்திருக்கும் மோடி ஆட்சியின் 100 நாட்கள் சாதனைகளைப் பாரீர் என்ற பிரசாரம் இது:

அதிகாரமில்லா அமைச்சர்கள்
- கேபினட் அமைச்சர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து நேரடியாக செயலர்களுடன் தொடர்பு கொள்வது
- மத்திய அமைச்சர்கள் தங்களது சொந்த செயலர்களை நியமிக்க அனுமதிக்காதது
- அமைச்சர்கள் எப்படி உடை அணிவிய வேண்டும், என்ன உண்ண வேண்டும் ஏன் என்ன பேச வேண்டும் என்று அட்வைஸ் செய்திருப்பது.

600 மத கலவரங்கள்
- 100 நாட்களில் நாடு முழுவதும் 600க்கும் மேற்பட்ட மதக் கலவரங்களை ஏற்படுத்தியிருப்பது
- புனேயில் ஹிந்துத்துவாதிகளில் முஸ்லிம் பொறியாளர் கோரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளது.
- முசாபர்நகர் கலவர குற்றவாளி சஞ்சீவ் பாலியானை அமைச்சரவையில் சேர்த்தது
- முசாபர் நகர் கலவர குற்றவாலி சங்கீத் சோமுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுத்திருப்பது
- மதவெறியைத் தூண்டுகிற யோகி ஆதித்யாநாத்தை உபி இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு தலைவராக நியமித்தது
- உத்தரப்பிரதேசத்தில் மதவன்முறைகளுக்கு காரணமே பாஜக என்ற விசாரணை கமிஷன் அறிக்கை

சர்ச்சை பேச்சுகள்
- மனித வளமேம்பாட்டுத் துறையின் கல்வியை அடுத்தடுத்து காவியமாக்கும் நடவடிக்கைகள்
- ஜம்மு காஷ்மீரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவை நீக்குவோம் என்ற அமைச்சர் ஜிதேந்திர பிரசாத் பேச்சு
- அனைவருமே இந்துக்கள்தான் என்று மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா கூறிவிட்டு பின்னர் இந்திக்கள்தான் என்று கூறியதாக பல்டி அடித்தது
- கல்வி அமைச்சரின் யேல் பல்கலைக் கழக பட்டம் தொடர்பான சர்ச்சை

பாலியல் கல்வி ரத்து
- எய்ட்ஸை தடுக்க காண்டங்களை விட கலாசாரம்தான் முக்கியம் என்ற அமைச்சர் ஹர்ஷவர்தன் பேச்சு
- பள்ளிகளில் பாலியல் கல்வியை ரத்து செய்ய வேண்டும் என்று ஹர்ஷவர்தனின் மற்றொரு பேச்சு
- காந்தி படுகொலை உள்ளிட்ட 1.5 லட்சம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோப்புகளை அளித்தது
- பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தும் பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவை கண்டுகொள்ளாமல் இருப்பது
- பதான் சிறுமிகள் பலாத்கார சம்பவத்தில் பிரதமர் மோடி மவுனமாக இருந்தது

இழுத்து மூடப்பட்ட திட்ட கமிஷன்
- இத்தனை ஆண்டுகாலம் இருந்த திட்டக்குழுவுக்கு மூடு விழா நடத்துவது
- ஐமு ஆட்சிக் கால அதிகாரிகள் கூடாது என்ற கொள்கை முடிவு
- எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட வழங்க மறுப்பது

தூக்கியடிக்கப்பட்ட ஆளுநர்கள்
- ஆளுநர்களை தூக்கியடிப்பது
- உலக வர்த்தக அமைப்பில் தனிமைப்படுத்தப்பட்டு உலக நாடுகளால் வில்லனாகப் பார்க்கும் நிலையை உருவாக்கியது

தோல்வியடைந்த வெளியுறவு
- 1971ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிக அதிகமான தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தி வருவது
- ஆசியான் கூட்டமைப்பில் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் மியான்மர் பயனத்தை நிர்மலா சீதாராமன் ரத்து செய்தது
- பாலஸ்தீனத்தின் காஸா மீதான தாக்குதலில் இஸ்ரேலுக்கு எதிராக ஐநாவில் வாக்களித்துவிட்டு இந்தியாவில் விவாதம் கூட நடத்த மறுத்தது

அன்னிய முதலீட்டு விவகாரம்
- ஐமு ஆட்சிக் கால திட்டங்களின் பெயர்களை மாற்றி அமைத்தது
- எதிர்க்கட்சியாக இருந்த போது எதிர்த்துவிட்டு இப்போது பாதுகாப்புத் துறையில் அன்னிய முதலீட்டை அதிகரித்தது
- ஒடிஷாவின் கந்தகாரில் போஸ்கோவுக்கு சுரங்க அனுமதி கொடுத்தது

ரயில் கட்டண உயர்வு
- ரயில் கட்டண உயர்வை 14% உயர்த்தியது
- மத்திய அமைச்சர்களில் 45 பேரில் 13 பேர் ஊழல் கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டிருப்பவர்கள்
- ஊழல் அமைச்சர்களை நீக்குங்கள் என்று பிரதமர் மோடிக்கு உச்சநீதிமன்றமே அறிவுறுத்தியிருப்பது
- கூட்டு பலாத்கார வழக்கில் அமைச்சர் மேக்வால் சிக்கியது.

ஆளுநராக உச்சநீதிமன்ற நீதிபதி..
- பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த்சிங்ஹா அரசு அதிகாரிகளைத் தாக்கியது
- இந்திய வரலாற்றில் முதல் முறையாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆளுநராக நியமிக்கப்படுகிறார்
- அனைத்து மாணவர்களுமே கட்டாயம் பிரதமர் உரையை கேட்டாக என்ற நிர்பந்தம்
- நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கென எந்த ஒரு செயல்திட்டமும் இல்லாதது












Click it and Unblock the Notifications