எங்கே எங்கே... அச்சே தின் எங்கே.... தேடுகிறார் பால் போக்பா!
பிரதமர் மோடி கூறிய அச்சே தின் என்கிற நல்ல காலம் எங்கே என்று பிரான்ஸ் கால்பந்து வீரர் பால் போக்பா தேடுவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளது காங்கிரஸ்.
Recommended Video

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின், அச்சே தின்' என்கிற நல்ல காலம் எப்போது வரும் என, பிரான்ஸ் கால்பந்து வீரர் பால் போக்பா தேடுவது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டு கிண்டல் செய்துள்ளது காங்கிரஸ் கட்சி.
2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது, அச்சே தின் எனப்படும் நல்ல காலம் விரைவில் வரும். கறுப்பு பணத்தை மீட்டு, மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார்.

ஆனால், அவை நிறைவேற்றப்படவில்லை. இதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக கிண்டல், விமர்சனம் செய்து வருகின்றன.
இந்த நிலையில், ரஷ்யாவில் நடந்த ஃபிபா உலகக் கோப்பை போட்டியின் பைனலில் வென்ற பிறகு, பிரான்ஸ் வீரர் பால் போக்பா, ஜாலியாக, தலையை இங்கும் அங்கும் திருப்பி கோப்பை எங்கே என்று தேடுவது போல் செய்வார்.
Pogba and us, same feels. @paulpogba pic.twitter.com/rIOqjY6bqT
— Congress (@INCIndia) July 17, 2018
யாராவது அச்சே என்று சொன்னால் என்று அதற்கு தலைப்பிட்டு, அந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. இதில், பால் போக்பாவையும் காங்கிரஸ் கட்சி டேக் செய்துள்ளது.
போக்பாவுக்கு இந்திய அரசியல் தெரியுமா என்பது தெரியவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியின் இந்த கிண்டல் வீடியோ வைரலாகி வருகிறது.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு












Click it and Unblock the Notifications