ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா அரசுக்கு வெளியில் இருந்து சப்போர்ட்? காங்கிரஸ் பிளான் என்ன..!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா அரசுக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து சப்போர்ட் செய்யும் என்றும், அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம் கோராது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உமர் அப்துல்லாவுக்கு சுயேச்சை எம்எல்ஏக்கள் 4 பேர் ஆதரவு அளித்துள்ளதால், காங்கிரஸ் தயவு இல்லாமலே அந்த கட்சிக்கு ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைத்தது.
ஜம்மு காஷ்மீர் முதல்வராக இன்று உமர் அப்துல்லா பதவியேற்க உள்ளார். உமர் அப்துல்லா இன்று முதல்வராக பொறுப்பேற்க உள்ள நிலையில், அவரது அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய மாநாட்டு கட்சிக்கு சுயேட்சை எம்எல்.ஏக்கள் ஆதரவு கொடுத்ததால் காங்கிரஸ் ஆதரவு இல்லாமலே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது.

இதனால், ஆட்சியில் பங்கு பெறாமல் வெளியில் இருந்து ஆதரவு மட்டும் அளிக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே ஒதுக்க தேசிய மாநாட்டு கட்சி முன் வந்ததாகவும், ஆனால், இதற்கு காங்கிரஸ் கட்சி சம்மதம் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், அமைச்சரவையில் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.
அதேவேளையில், ஆட்சியில் பங்கு பெறாமல் இருப்பது ஒருவழியில் காங்கிரஸ் கட்சிக்கு, ஜம்மு காஷ்மீரில் கட்சியை வலுப்படுத்த உதவும் என அக்கட்சியினர் நம்புவதாகவும் சொல்லப்படுகிறது. இதனை எல்லாம் கணக்கு போட்டு தான் காங்கிரஸ் மேலிடம் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட இருந்த நிலையில், கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
90 சட்டமன்ற இடங்கள் கொண்ட காஷ்மீர் சட்டசபைக்கு நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் தேசிய மாநாட்டு கட்சி - 42 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வென்றது. அங்கு ஆட்சி அமைக்க 46 எம்.எல்.ஏக்கள் தேவை என்கிற போது 48 எம்எல்ஏக்கள் ஆதரவு தேசிய மாநாட்டு கட்சிக்கு கிடைத்தது.
இதற்கிடையே தான் சுயேச்சை எம்எல்ஏக்கள் 4 பேர் தேசிய மாநாட்டு கட்சிக்கு ஆதரவு அளித்தனர். இதனால் மொத்த பலம் 52 ஆக அதிகரித்தது. இத்தகையை சூழலில் தான் காங்கிரஸ் தயவு இல்லாமலே ஆட்சி அமைக்கும் பலம் தேசிய மாநாட்டு கட்சிக்கு கிடைத்தது. இதனை தொடர்ந்து தான் காங்கிரஸ் அமைச்சரவையில் பங்கு கோராமல், வெளியில் இருந்து சப்போர்ட் செய்ய முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications