For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மூன்றாவது ஆண்டில் மோடி அரசு.. கிராம சாலைகள் திட்டத்தை செயல்படுத்துவதில் சறுக்கியதா, சாதித்ததா?

2008-09 முதல் 2010-11 வரை, ஆண்டுக்கு சராசரியாக 143.96 கி.மீ. சாலைகள் அமைக்கப்பட்ட நிலை மாறி 2011-12 க்கும் 2013-14 க்கும் இடையே 73.49 கி.மீ. என்ற அளவில் குறைந்தது

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: மோடி தலைமையிலான அரசு மூன்றாண்டு காலத்தை நிறைவு செய்துள்ள நிலையில், கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டமான பிரதம மந்திரி கிராம் சடக் யோஜனா திட்டத்தில் அரசு எந்த அளவு வெற்றி பெற்றுள்ளது என்பது குறித்து, ரன்னிடி கன்சல்டிங் அண்ட் ரிசர்ச்சின் நிதின் மேத்தா மற்றும் ஆய்வாளர் பிரணவ் குப்தா ஆகியோர் நடத்திய புள்ளி விவர ஆய்வு இது.

கிராமப்புற பொருளாதாரத்திற்கு சாலைகள் மிகவும் முக்கியம். நன்கு கட்டமைக்கப்பட்ட கிராமப்புற சாலைகள் கிராமத்தின் இணைப்புகளை மேம்படுத்த மட்டுமல்லாமல் கிராமவாசிகளுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிக்கும்.

பிரதம மந்திரி கிராம் சடக் யோஜனா, டிசம்பர் 2000 இல் வாஜ்பாய் அரசாங்கத்தால் நாட்டிலுள்ள அனைத்து கிராமப்புற குடியிருப்புகளுக்கும் சாலை இணைப்புகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.

வாஜ்பாய் அரசு அடித்தளம்

வாஜ்பாய் அரசு அடித்தளம்

கடந்த 17 ஆண்டுகளில், கிராமப்புற குடிமக்களின் உயிர்களை மாற்றியமைப்பதில் இத்திட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் அளித்த அடித்தளம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு மிகவும் வசதியாக இருந்தது. இருப்பினும், 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்த திட்டத்தை கிடப்பில் போட்டது. 2014 ஆம் ஆண்டு மே மாதத்தில் மோடி அரசு பதவி ஏற்றபோது, உள்கட்டமைப்பு பற்றிய முன்னேற்றத்தை புதுப்பித்தது.

கிராம மக்கள்

கிராம மக்கள்

நாட்டின் கிராமப்புறங்களில் சுமார் 70 சதவிகித மக்கள் வசிக்கின்றனர். கிராமப்புற வருமானங்களை அதிகரிக்கும் ஒரு கடுமையான சவாலை அரசு எதிர்கொள்கின்றது. கிராமங்களுக்கு அடிப்படை சுகாதார மற்றும் கல்விச் சேவைகளை வழங்குவதை சாலை மேம்பாடுதான் உறுதிப்படுத்துகிறது.

கல்விக்கு உதவும்

கல்விக்கு உதவும்

நல்ல தரமான சாலைகள் மறைமுகமாக முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றன. உதாரணமாக, கிராம சாலைகளால் பயண நேரம் குறைக்கப்படுவதால், நகர்ப்புற பகுதிகளை எளிதில் மக்கள் அணுக முடியும். இது பரவலாக வாழ்வாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துகிறது. கல்வி விஷயத்தில், நல்ல சாலைகள் கல்விக்கான தேர்வுகளை அதிகரிக்கின்றன, அவை பயண நேரத்தை குறைக்கின்றன, மேலும் மாணவர்கள் தொலைதூர பயணங்களை மேற்கொள்வதற்கு உதவுகின்றன.

இரண்டாவது ஆட்சியில் மோசம்

இரண்டாவது ஆட்சியில் மோசம்

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஐந்தாண்டுகளில் இச்சாலை திட்டம் நல்ல முன்னேற்றம் அடைந்ததையும், அந்த ஆண்டுகளில் சாதித்த வருடாந்திர வீதங்கள் மிக அதிகமாக இருந்ததையும் நாங்கள் கண்டோம். 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆரம்ப ஆண்டுகளும் மிகவும் நன்றாகவே இருந்தன, ஆனால் இரண்டாவது பாதியில் மோசமான விளைவுகள் ஏற்பட்டன.

சராசரி குறைந்தது

சராசரி குறைந்தது

2008-09 முதல் 2010-11 வரை, ஆண்டுக்கு சராசரியாக 143.96 கி.மீ. சாலைகள் அமைக்கப்பட்ட நிலை மாறி 2011-12 க்கும் 2013-14 க்கும் இடையே 73.49 கி.மீ. என்ற அளவில் குறைந்தது.

மோடி அரசில் அதிகரிப்பு

மோடி அரசில் அதிகரிப்பு

மோடி அரசாங்கத்தின் கீழ், இந்த சராசரி எண்ணிக்கை நாளொன்றுக்கு 36 கி.மீ. அதிகரித்து சராசரியாக 109.7 கி.மீயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2016-17 ஆம் ஆண்டில், இந்த விகிதம் ஒரு நாளைக்கு 129.7 கி.மீ. என்ற அளவில் அதிகரித்துள்ளது.

அதிகரிக்க வேண்டியது அவசியம்

அதிகரிக்க வேண்டியது அவசியம்

ஆனாலும், அரசு இப்போது நிர்ணயிக்கப்பட்ட நிர்ணய வீதத்தை மேலும் அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். இதற்காக, அரசு தணிக்கை மற்றும் கொள்முதல் செயல்முறைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும். இனாம் ப்ரோ போன்ற புதுமையான யோசனை வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க மட்டுமல்லாமல் செயலாக்கத்தை விரைவாகச் செய்வதற்கும் பெரும் உதவியாக இருக்கும்.

English summary
Roads are extremely important for the rural economy. Well constructed rural roads not only improve the connectivity of the village but also augment livelihood opportunities for the villagers.
Read in English: Connecting rural India?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X