திடீர் திருப்பம்.. தள்ளிப்போனது வாக்கு எண்ணிக்கை.. மிசோரமில் திங்கள்கிழமை கவுண்டிங்

Subscribe to Oneindia Tamil

ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் டிச. 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அதை மாற்றி டிச. 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் இப்போது தேர்தல் நடைபெறுகிறது. அதில் மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது.

Counting of votes for Mizoram Assembly election couting deferred by a day to Monday

அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. இந்த 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் டிச. 3ஆம் தேதி எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

மிசோரம்: இதற்கிடையே மிசோரம் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மிசோரம் மாநிலத்தில் உள்ள என்ஜிஓ குழு தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்திக்க டெல்லிக்குச் சென்றது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் டிசம்பர் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.

மிசோரம் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள நிலையில், அங்குள்ள அனைத்து முக்கிய அரசியல் கட்சிகள், அமைப்புகள் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடக்கக் கூடாது என்று வலியுறுத்தின. இது தொடர்பாக அவர்கள் தேர்தல் ஆணையத்தைச் சந்தித்து கோரிக்கையும் வைத்தனர்.

இந்தச் சூழலில் தான் மிசோரம் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்றுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது அங்கே டிச. 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அதை மாற்றி டிச. 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்கே கடந்த நவ. 7ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. அதில் 80% வாக்குகள் பதிவானது. அங்கே மிசோரம் முன்னணி மற்றும் காங்கிரஸ் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+