சாதாரண ரைஸ் 'ஃப்ரைட் ரைஸாக' மாறிய விசித்திரம்.. குக்கருக்கு அடியில் பார்த்தால் "உவ்வே.."
மும்பை: மும்பையைச் சேர்ந்த ஒரு தம்பதி தங்கள் வீட்டில் சாதாரணமாகச் செய்யும் சாதத்தில் இருந்து எப்படி 'ஃப்ரைடு ரைஸ்' போல வாசம் வருகிறது என்ற 'பகீர்' உண்மையை கண்டுபிடித்து அதிர்ச்சியிலும், அருவருப்பிலும் மூழ்கிப் போயுள்ளனர்.
எப்போதுமே விதவிதமான உணவைப் பற்றிய வீடியோக்களும், அவற்றின் செய்முறை குறித்த நிகழ்ச்சிகளுக்கும் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு இருப்பது வழக்கம். தற்போது சமூக வலைத்தளங்களும் பெருகிவிட்டதால், கேட்கவே வேண்டாம்.. உணவுகளை பற்றிய ஏராளமான சேனல்கள் வந்துவிட்டன.
உண்மையில், உணவுகளைப் பற்றிய வீடியோக்களை பார்ப்பது ஒருவித உற்சாகத்தைத் தரும் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதே நேரத்தில், சில வீடியோக்களோ உணவு மீதான ஆசையையே அடியோடு போக்கிவிடும். அப்படிப்பட்ட ஒரு வீடியோதான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மும்பை தம்பதி
ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்த இளம் தம்பதியர், மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். இதனிடையே, அவர்கள் தினமும் மின்சாரக் குக்கரில் சாதம் வடித்துச் சாப்பிடுவதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் சாதம் வடிக்கும் போது அதில் ஃப்ரைடு ரைஸ் மணம் தூக்கலாக இருந்துள்ளது. எப்படி சாதாரணமாகச் செய்யும் சாதம் ஃப்ரைடு சாதம் போல மணம் வீசுகிறது என அவர்கள் முதலில் குழம்பியிருக்கின்றனர்.

நண்பர்கள்
பின்னர், தனது கை மணம் தான் இதற்குக் காரணம் என அந்தப் பெண் தனக்கு தானே நினைத்துக் கொண்டார். அவரது கணவரும் பெருமிதமாகத் தனது நண்பர்களிடம், "என் மனைவி பொங்குற சாதம் கூட ஃப்ரைடு ரைஸ் போல மணக்கும் தெரியுமா.." என பெருமையடித்து கொள்வாராம். இதனால் அவரது அலுவலக நண்பர்களும் அவ்வப்போது அவர் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

பாராட்டு
"எங்க வீட்டுல ஃப்ரைடு ரைஸ் வெச்சாலே இந்த வாசனை வராது.. ஆனா சாதாரண ஒயிட் ரைஸையே உன் மனைவி ஃப்ரைடு ரைஸ் போல செய்றாங்களே.." என அவரது நண்பர்களுக்கு ஏகத்துக்குப் பாராட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்த சூழலில்தான், அவர்களின் மின்சார குக்கர் பழுதாகியுள்ளது. இதையடுத்து, அதை பழுது நீக்கும் பணியில் இரு தினங்களுக்கு முன்பு அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

உண்மை என்ன
அப்போது அந்தக் குக்கரின் அடிப்பாகத்தைக் கழட்டிப் பார்த்த போது கணவனும் - மனைவியும் அதிர்ச்சியும் அருவருப்பும் அடைந்து வாந்தி எடுத்துள்ளனர். ஏனெனில், அதில் 7-க்கும் மேற்பட்ட பல்லிகள் பொசுங்கிப் போய் கருகிய நிலையில் இருந்தன. குக்கர் சூடாகும் போது இந்த இறந்துபோன பல்லிகள் மேலும் கருகுவதால்தான், அதில் செய்யும் சாதாரண ரைஸும் ஃப்ரைடு ரைஸ் போல மணம் வீசுகிறது என்ற உண்மை அவர்களுக்குத் தெரியவந்துள்ளது. இந்த காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட அந்த தம்பதியர், "மின் குக்கர் உங்கள் வீட்டில் இருந்தால், தயவுசெய்து அதன் அடிப்பாகத்தைக் கழற்றி அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள். இல்லையெனில் எங்களைப் போல நீங்களும் ஃப்ரைடு ரைஸ் சாப்பிட வேண்டி வரும்" எனக் கிண்டலாகப் பதிவிட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications