Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவில் கிரிக்கெட் வெறு விளையாட்டு அல்ல அதையும் தாண்டி ஒரு மதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவை பொறுத்த வரை கிரிக்கெட் என்பது வெறும் விளைாட்டு அல்ல அது ஒரு மதம் ஆகும்.

இந்திய மக்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் ஒரு விஷயம் என்றால் அது கிரிக்கெட் தான். கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு அல்ல அது ஒரு மதம். கிரிக்கெட் போட்டி நடக்கிறது என்றால் மக்கள் டிவியுடன் ஒன்றி விடுவார்கள். போட்டி நடக்கும் நாட்களில் மக்கள் இந்திய அணியின் 11 வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து டிவியை பார்ப்பார்கள்.

இந்தியாவின் தேசிய விளைாட்டாக ஹாக்கி இருந்தாலும் அனைவருக்கும் கிரிக்கெட் தான் பிடித்த விளையாட்டு ஆகும். இந்தியாவில் கிரிக்கெட் ஏன் ஒரு மதம் போன்று பார்க்கப்படுகிறது என்பதற்கான சில காரணங்கள்.

Cricket as a way of life in India

டெண்டுல்கர் கடவுள்

இந்தியாவில் கிரிக்கெட் கிரிக்கெட் என்று இருக்கும் மக்களுக்கு சச்சின் டெண்டுல்கர் தான் கடவுள். கிரிக்கெட் வீரர் ஆக வேண்டும் என்ற கனவோடு வளரும் அனைத்து குழந்தைகளுக்கும் அவர் தான் ஹீரோ.

கொண்டாட்டம்

எதையாவது கொண்டாட இந்தியர்களுக்கு ஒரு காரணம் வேண்டும். அதற்கு கிரிக்கெட் தான் சிறந்த காரணம். இந்தியா உலகக் கோப்பையை வென்றாலும் சரி, பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டியில் வென்றாலும் சரி நீல நிற ஆடை அணிந்த ரசிகர்கள் இந்திய தேசிய கொடியை அசைப்பதை பார்க்க முடியும்.

ஒற்றுமை

இந்தியாவில் கிரிக்கெட் என்று வந்துவிட்டால் மக்கள் மதங்களை பார்ப்பது இல்லை. அனைவரும் கிரிக்கெட் என்ற ஒரு மதத்தை மட்டுமே பின்பற்றுகிறார்கள். கிரிக்கெட் அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்துள்ளது.

விடுப்பு

முக்கியமான கிரிக்கெட் போட்டி நடக்கும் நாட்களில் மக்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்க தயங்குவதே இல்லை. சில அலுவலகங்களில் போட்டி தினத்தன்று விடுமுறை அளித்துவிடுவார்கள். மக்களுக்கு கிரிக்கெட் மீது அவ்வளவு மோகம்.

இந்தியா-பாகிஸ்தான்

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றால் அதை விட பெரிய சந்தோஷம் இந்திய ரசிகர்களுக்கு வேறு எதுவும் இல்லை. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டிகளை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பார்கள். அது போட்டியையும் தாண்டி போர் போன்று பார்க்கப்படும்.

விதிமுறைகள்

அனைவருக்கும் விதிமுறைகள் தெரிந்திருக்கும். இது சிக்சர், இது ஃபுல் டாஸ், இது லெக் சைட் என்பதை அனைவரும் தெரிந்து வைத்திருப்பார்கள்.

தேவைகள்

இந்தியாவிலோ அல்லது உலகின் வேறு எந்த பகுதியிலோ டெஸ்ட், ஒரு நாள் போட்டி அல்லது டி20 தொடர் நடந்தால் ஸ்கோர், சமீபத்திய நிகழ்வுகளை தெரிந்து கொள்ள விரும்புவார்கள் ரசிகர்கள்.

போட்டி நாளன்று டிவிக்கு முன்பு இருக்க முடியவில்லை, அன்று வேலைக்கு சென்றே ஆக வேண்டிய நிலையில் உள்ளவர்களுக்காகவே பல ஆப்ஸ்கள் உள்ளன. அத்தகைய அப்ளிகேஷன் தான் யுசி கிரிக்கெட். அதன் மூலம் ஸ்கோர்கள் மட்டும் அல்ல போட்டி பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்.

யுசி பிரவுசரின் இன்-ஆப் பீச்சரான யுசி கிரிக்கெட் கிரிக்கெட் தேவைகளை கவனித்துக் கொள்கிறது. ரசிகர்களின் கிரிக்கெட் பைபிள் என்று அழைக்கப்படுகிறது. லைவ் ஸ்கோர், போட்டியின் முன்னோட்டம், கமெண்டரி, இன்டர்வியூக்கள், வியூகங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்று பிற யுசி கிரிக்கெட்டில் கிடைக்கும்.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஒவ்வொரு போட்டியின் கமெண்ட் பகுதியில் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள முடியும். லைவ் ஸ்கோர்களை தெரிந்து கொள்வதுடன் ரசிகர்கள் போட்டியை கணிக்கவும் முடியும்.

அவ்வாறு கணிப்பவர்கள் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை கணித்து புள்ளிகளை சேர்த்து பரிசுகள் வெல்லும் வாய்ப்பை பெறலாம். பல பரிசுகளை வெல்ல ரசிகர்களுக்காக பல போட்டிகள் நடத்தப்படுகிறது. கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் யுசி கிரிக்கெட்டை அதிக அளவில் பயன்படுத்துபவர்.

இது குறித்து யுவராஜ் கூறுகையில்,

யுசி பிரவுசரின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இது ஒரு நல்ல பிரவுசர். இந்திய சந்தையில் அவர்கள் எங்களை நன்கு புரிந்து வைத்துள்ளனர். யுசி பிரவுசரை பயன்படுத்துவதில் மகிழ்ச்சி. வேலையில் பிசியாக இருக்கிறேன். கையில் போன் இருந்தால் நீங்கள் சாட் செய்யலாம், செய்திகளை படிக்கலாம். அதற்கு வேகமான பிரவுசர் தேவை. அதனால் தான் எனக்கு யுசி பிரவுசர் பிடித்துள்ளது.

யுசி பிரவுசர் இளைஞர்களுக்கு ஏற்றது. இதை விட உங்களுக்கு வேறு என்ன வேண்டும்? மைதானத்தில் இருக்கையில் கிரிக்கெட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்புவதால் தான் எனக்கு யுசி கிரிக்கெட் பிடித்துள்ளது. அங்கு அப்டேட்ஸ், புகைப்படங்கள், கமெண்டரி, பந்து வாரியாக அப்டேட் செய்வது எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்றார்.

இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகள் டி20 போட்டிகள், சர்வதேச ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் நேரத்தில் யுசி கிரிக்கெட் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

நீங்கள் யுசி கிரிக்கெட்டை இங்கு டவுன்லோடு செய்து முன்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு கிரிக்கெட் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

யுசிவெப் பற்றி

யுசிவெப் இன்க் என்பது முன்னணி செல்போன் இன்டர்நெட் சாப்ட்வேர் மற்றும் சேவைகள் வழங்கி வருகிறது. 2004ம் ஆண்டு துவங்கப்பட்டதில் இருந்து செல்போன் பயன்பாட்டாளர்களுக்கு சிறந்த இன்டர்நெட் அனுபவத்தை அளித்து வருகிறது.

யுசிவெப்பின் முக்கியமான தயாரிப்பு தான் யுசிபிரவுசர். 200 தயாரிப்பாளர்களின் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன்களில் யுசிபிரவுசர் வேலை செய்யும். அனைத்து முக்கிய ஆபரேட்டிங் சிஸ்டம்களையும் யுசிபிரவுசர் ஏற்கும்.

உலக அளவில் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் 500 மில்லியனுக்கும் மேற்பட்டோர் யுசிபிரவுசரை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் யுசிபிரவுசர் ஆங்கிலம், ரஷ்ய மொழி, இந்தோனேசிய மொழி, வியட்நாம் மொழி உள்ளிட்ட 10 மொழிகளில் வந்துள்ளது. யுசிவெப் மற்றும் யுசிபிரவுசர் பற்றி மேலும் தகவல் அறிய www.ucweb.com என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+