குஜராத் தேர்தல்.. “ஷாக்” ரிசல்ட்! உயர்ந்த “கிரிமினல் பேக்ரவுண்ட்” வேட்பாளர்கள்! முதலிடம் எந்த கட்சி?
காந்திநகர்: குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களில் 21 சதவீதம் பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்பது தெரியவந்து இருக்கிறது.
டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 2 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. டிசம்பர் 8 ஆம் தேதி குஜராத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 10க்கும் குறைவான நாட்களே உள்ளன.

2 கட்ட தேர்தல்
இதனை அடுத்து மூன்று கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் குஜராத்தில் முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தில் 89 தொகுதிகளுக்கு முதல் கட்டமாகவும், 93 தொகுதிகளுக்கு 2 வது கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

குற்றப்பின்னணி வேட்பாளர்கள்
இதற்கான வேட்பாளர்களை மூன்று கட்சிகளும் அறிவித்துவிட்டன. முதல்கட்ட தேர்தலில் மூன்று கட்சிகள் மட்டுமின்றி சிறிய கட்சிகள், சுயேட்சைகள் என மொத்தம் 788 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இதில் 21 சதவீத வேட்பாளர்கள் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என ADR எனப்படும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் தெரிவித்து இருக்கிறது.

உயர்ந்த சதவீதம்
கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 15 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது இது அதிகரித்து உள்ளதாக அந்த அமைப்பு கூறி உள்ளது. இதில் அதிகளவிலான குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களின் வரிசையில் முதலிடத்தில் இருப்பது ஆம் ஆத்மி கட்சிதான். அந்த கட்சியை சேர்ந்த 36% பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள்.

பாஜகவுக்கு எந்த இடம்?
இதற்கு அடுத்த இடத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளது. அக்கட்சியை சேர்ந்த 35 சதவீதம் பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள். ஆளும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நிறுத்தப்பட்டு இருக்கும் வேட்பாளர்களில் 16 சதவீதம் பேருக்கு குற்றப்பின்னணி உள்ளது. ஆனால் கடந்த 2017 ஆம் ஆண்டு பாஜக 25 சதவீத குற்றப்பின்னணி வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தியது.

என்னென்ன குற்றங்கள்?
மாநில கட்சிகளை எடுத்துக்கொண்டால் பாரதிய பழங்குடியினர் கட்சியில் 29 சதவீதம் பேருக்கு குற்றப்பின்னணி உள்ளது. ஆனால், கடந்த 2017 ஆம் ஆண்டு இதே கட்சி வேட்பாளர்களில் 67 பேர் குற்றப்பின்னணி கொண்டவர்களாக இருந்தார்கள். அனைத்து கட்சி வேட்பாளர்களில் 9 பேர் மீது பெண்களுக்கு எதிரான கிரிமினல் குற்றங்களும், 3 வேட்பாளர்கள் மீது கொலை குற்றங்கள், 12 பேர் மீது கொலை முயற்சி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications