Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உ.பி.யில் முந்தைய ஆட்சிகளில் மாஃபியாக்களின் விளையாட்டுகள்தான் அரங்கேறின... பிரதமர் மோடி அட்டாக்

Subscribe to Oneindia Tamil

மீரட்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் முந்தைய ஆட்சிக் காலங்களில் மாஃபியாக்களின் விளையாட்டுகள்தான் அரங்கேறின என்று பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் செயற்கை ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், கூடைப்பந்து / கையெறிப்பந்து / கைப்பந்து / கபடி மைதானம், புல் டென்னிஸ் மைதானம், உடற்பயிற்சி கூடம், செயற்கை ஓடுதளம், நீச்சல் குளம், பல்நோக்கு கூடம் மற்றும் மிதிவண்டி தளம் உள்ளிட்ட அதிநவீன விளையாட்டு உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.

துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக்ஸ், பளு தூக்குதல், வில்வித்தை, கேனோயிங் மற்றும் கயாக்கிங் போன்றவற்றுக்கான வசதிகளும் பல்கலைக்கழகத்தில் இருக்கும். 540 பெண்கள் மற்றும் 540 ஆண் விளையாட்டு வீரர்கள் உட்பட 1080 விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் திறனை பல்கலைக்கழகம் கொண்டிருக்கும். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

 சுதந்திரப் போரில் மீரட்

சுதந்திரப் போரில் மீரட்

சுதந்திர இந்தியாவிற்கு புதிய திசையை வழங்குவதில் மீரட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி இருக்கிறது. இப்பகுதியைச் சேர்ந்த மக்கள், தேசத்தின் பாதுகாப்பிற்காக எல்லையில் தியாகம் செய்துள்ளதோடு, விளையாட்டு மைதானத்திலும் நாட்டின் மதிப்பை உயர்த்தியுள்ளனர். தேசபக்தியின் சுடரை இந்த பிராந்தியம் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

 தியான் சந்த் பல்கலைக் கழகம்

தியான் சந்த் பல்கலைக் கழகம்

இந்திய வரலாற்றில், மீரட் ஒரு நகரமாக மட்டும் இல்லாமல், கலாச்சாரம் மற்றும் வலிமையின் குறிப்பிடத்தக்க மையமாக உள்ளது. சுதந்திர அருங்காட்சியகம், அமர் ஜவான் ஜோதி மற்றும் பாபா ஔகர் நாத் ஜி கோவில் ஆகியவற்றின் மகத்துவத்தை நாம் உணர்ந்ததிருக்கிறோம். சில மாதங்களுக்கு முன், நாட்டின் மிகப்பெரிய விளையாட்டு விருதை மேஜர் தியான் சந்த் என்கிற விளையாட்டு மாவீரரின் பெயரில் மத்திய அரசு அறிவித்தது. மீரட்டில் உள்ள விளையாட்டு பல்கலைக்கழகம் மேஜர் தியான் சந்துக்கு இன்று அர்ப்பணிக்கப்படுகிறது.

 முந்தைய அரசுகள் மீது விமர்சனம்

முந்தைய அரசுகள் மீது விமர்சனம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முன்பு குற்றவாளிகள் மற்றும் மாஃபியாக்கள் தங்கள் விளையாட்டுகளை விளையாடிய நிலை மாறியுள்ளது. சட்டவிரோத ஆக்கிரமிப்பு, மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் கண்டுகொள்ளப்படாமல் இருந்தன. இப்போது யோகி அரசு இதுபோன்ற குற்றவாளிகள் மத்தியில் சட்டத்தின் மீதான பயத்தை உருவாக்குகிறது. இந்த மாற்றம் முழு நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் என்ற நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. புதிய இந்தியாவுக்கான அடித்தளம் மற்றும் விரிவாக்கம் இளைஞர்கள் தான். இளைஞர்கள் புதிய இந்தியாவை வடிவமைத்து தலைவர்களாகவும் உள்ளனர். இன்றைய நமது இளைஞர்கள் தொன்மையின் பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதோடு, நவீனத்துவ உணர்வையும் கொண்டுள்ளனர். அதனால், இளைஞர்கள் எங்கு செல்வார்களோ, இந்தியாவும் அங்கு நகரும்.

 விளையாட்டுக்கு முக்கியத்துவம்

விளையாட்டுக்கு முக்கியத்துவம்

இந்தியா செல்லும் இடத்திற்கு உலகமும் செல்லப் போகிறது. கடந்த சில ஆண்டுகளில், வளங்கள், பயிற்சிக்கான நவீன வசதிகள், சர்வதேச வெளிப்பாடு மற்றும் தேர்வில் வெளிப்படைத்தன்மை ஆகிய நான்கு கருவிகளை இந்திய வீரர்கள் பெறுவதற்கு மத்திய அரசாங்கம் முதன்மையான முன்னுரிமை அளித்தது. நாட்டில் விளையாட்டு வளர்ச்சியடைய, இளைஞர்கள் விளையாட்டில் நம்பிக்கை வைப்பது அவசியம். விளையாட்டை ஒரு தொழிலாகக் கொள்ள அவர்களை ஊக்குவிக்க வேண்டும். இது என் தீர்மானம், என் கனவும் கூட! நமது இளைஞர்கள் மற்ற தொழில்களைப் போல விளையாட்டையும் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். விளையாட்டை அரசு வேலைவாய்ப்புடன் இணைத்துள்ளது. டார்கெட் ஒலிம்பிக் போடியம் (டாப்ஸ்) போன்ற திட்டங்கள் மிக உயர்ந்த மட்டத்தில் போட்டியிடுவதற்கான அனைத்து ஆதரவையும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்குகின்றன. கேலோ இந்தியா திட்டம் திறமைகளை வெகு விரைவில் அடையாளம் கண்டு வருகிறது. மேலும் சர்வதேச அளவில் அவர்களை வளர்க்க அனைத்து ஆதரவும் அளிக்கப்படுகிறது. ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவின் சமீபத்திய செயல்திறன் விளையாட்டுக் களத்தில் புதிய இந்தியாவின் எழுச்சிக்கு சான்றாகும்.

 மீரட் சந்தை

மீரட் சந்தை

கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் விளையாட்டு உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதால், இந்த நகரங்களில் இருந்து விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதிய தேசிய கல்விக் கொள்கையில் விளையாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அறிவியல், வணிகம் அல்லது பிற படிப்புகளின் அதே இடத்தில் விளையாட்டு இப்போது வைக்கப்பட்டுள்ளது. விளையாட்டுகள் முன்பு கூடுதல் பாடத்திட்டமாக கருதப்பட்டது, ஆனால் இப்போது விளையாட்டு பள்ளிகள் அதை முறையான பாடமாக வைத்திருக்கும். விளையாட்டு, விளையாட்டு மேலாண்மை, விளையாட்டு எழுத்து, விளையாட்டு உளவியல் போன்றவற்றை உள்ளடக்கிய விளையாட்டு சூழலியல் புதிய சாத்தியங்களை உருவாக்குகிறது. விளையாட்டை நோக்கி நகர்வது சரியான முடிவு என்ற நம்பிக்கையை சமுதாயத்தில் இது ஏற்படுத்துகிறது. வளங்களுடன் ஒரு விளையாட்டு கலாச்சாரம் உருவாகிறது, விளையாட்டு பல்கலைக்கழகம் இதில் பெரிய பங்கை வகிக்கும. மீரட் நகரம் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விளையாட்டு பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. இதன் மூலம், உள்ளூர் தொழில்களுக்கு மீரட் ஊக்கம் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் பொருட்களை உலகத்திற்கானவையாக மாற்றுகிறது.

 என்ன சாதனைகள்?

என்ன சாதனைகள்?

உத்தரப்பிரதேசத்தின் இரட்டை எஞ்சின் அரசு பல பல்கலைக்கழகங்களை நிறுவி வருகிறது. கோரக்பூரில் உள்ள மகாயோகி குரு கோரக்நாத் ஆயுஷ் பல்கலைக்கழகம், பிரயாக்ராஜில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் சட்டப் பல்கலைக்கழகம், லக்னோவில் உள்ள தடயவியல் அறிவியல் நிறுவனம், அலிகாரில் உள்ள ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநில பல்கலைக்கழகம், சஹாரன்பூரில் உள்ள மா ஷகும்பரி பல்கலைக்கழகம் மற்றும் மீரட்டில் மேஜர் தியான் சந்த் பல்கலைக்கழகம் ஆகியவற்றை சொல்லலாம். எங்கள் இலக்கு தெளிவாக உள்ளது. இளைஞர்கள் முன்மாதிரியாக மாறுவது மட்டுமல்லாமல் அவர்களின் முன்மாதிரிகளையும் அங்கீகரிக்க வேண்டும். ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் 75 மாவட்டங்களில் 23 லட்சத்திற்கும் அதிகமான சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகள் கவுரவ நிதியின் கீழ் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் கணக்கில் பல கோடி ரூபாய் பெற்றுள்ளனர். கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சாதனை அளவிலான நிதியால் இம்மாநில விவசாயிகளும் பயன் அடைந்துள்ளனர். அதேபோல் உ.பி.யில் இருந்து 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான எத்தனால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

 உ.பி. பாஜக அரசின் சாதனைகள்

உ.பி. பாஜக அரசின் சாதனைகள்

அரசுகளின் பணி ஒரு பாதுகாவலரின் வேலையை போன்றது. தகுதி உள்ளவர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும், தவறுகளை இளைஞர்களின் கவனக்குறைவாக நியாயப்படுத்த முயற்சிக்கக் கூடாது. தற்போதைய உத்தரப்பிரதேச அரசு இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. ஐ.டி.ஐ.யில் பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேசிய தொழிற்பயிற்சி திட்டம் மற்றும் கௌஷல் விகாஸ் திட்டம் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். கங்கை விரைவுச்சாலை, பிராந்திய விரைவு ரயில் போக்குவரத்து அமைப்பு மற்றும் மெட்ரோ ஆகியவற்றின் இணைப்பின் மையமாகவும் மீரட் மாறி வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+