For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதுச்சேரி நாராயணசாமி அரசுக்கு முற்றும் நெருக்கடி: மேலும் ஒரு எம்.எல்.ஏ விலகல்

By BBC News தமிழ்
|
சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் (இடது) பதவி விலகல் கடிதத்தை வழங்கும் லட்சுமி நாராயணன் (வலது)
BBC
சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் (இடது) பதவி விலகல் கடிதத்தை வழங்கும் லட்சுமி நாராயணன் (வலது)

புதுச்சேரியில் சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடக்கவுள்ள நிலையில் காங்கிரஸ் காட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகியுள்ளார்.

இதனால் சபாநாயகர் இல்லாமல், புதுவை சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் பலம் ஒன்பதாக குறைந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்பவன் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முதல்வர் நாராயணசாமியின் சட்டமன்ற நடவடிக்கைகளுக்கான செயலாருமான லட்சுமி நாராயணன் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

Click here to see the BBC interactive

இதற்கான கடிதத்தை சபாநாயகர் சிவக்கொழுந்துவின் இல்லத்தில் அவரைச் சந்திந்து வழங்கினார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியுளளது குறிப்பிடத்தக்கது. இவர்களை தொடர்ந்து மேலும் ஒரு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகியுள்ளது புதுச்சேரியில் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு பதவி விலகிய நமச்சிவாயம் மற்றும் தீப்பாய்ந்தான் ஆகியோர் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

தற்போது பதவி விலகிய லட்சமி நாராயணசாமி புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்தத் தகவல் இன்னும் உறுதியாகவில்லை.

BBC Indian Sports Woman of the Year
BBC
BBC Indian Sports Woman of the Year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Chief Minister Narayanasamy's Assembly Affairs Secretary Lakshmi Narayanan has resigned from the post of Assembly Member.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X