விதிகளை தளர்த்தி மீண்டும் சிபிஐ கட்சி பொது செயலாளரானார் டி.ராஜா.. கொந்தளித்த தென்னிந்திய நிர்வாகிகள்
சண்டிகர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக தொடர்ந்து மூன்றாவது முறையாக டி. ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி வயது வரம்பு விதிகளை தளர்த்தி டி. ராஜா நியமனம் செய்யப்பட்டதற்கு, அந்தக் கட்சியில் எதிர்ப்புகள் எழுந்தன. முக்கியமாக கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் டி. ராஜா. இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகியாக பல பதவிகளில் இருந்துள்ளார். எம்பி உள்ளிட்ட பதவியையும் வகித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த சுதாகர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, டி. ராஜா கடந்த 2019 ஆம் ஆண்டு அந்தப் பதவியில் நியமனம் செய்யப்பட்டார்.

3வது முறை பொதுச் செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தலித் பொதுச்செயலாளர் என்ற பெருமையை ராஜா பெற்றார். அந்தப் பதவிக்கு 3 ஆண்டு காலம் இருக்கும். இதையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஆந்திரா மாநிலத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ராஜா மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 2 முறை அவர் அந்தப் பதவியில் இருந்தார்.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டம் சண்டிகர் மாநகரில் நடைபெற்று வருகிறது. கட்சி நூற்றாண்டை நெருங்கி வரும் நிலையில் இந்த செயற்குழுவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் டி.ராஜா தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விதிகள் தளர்வு
இங்கு தான் பிரச்சனையே. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விதிகள்படி, கட்சி நிர்வாகக் குழு பதவிகளில் இருப்போர் 75 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ராஜாவுக்கு தற்போது வயது 76. இருப்பினும் கட்சி விதிகளை தளர்வு செய்து அவரை மூன்றாவது முறை பொதுச்செயலாளராக தேர்வு செய்துள்ளனர். இதற்கு கட்சியில் எதிர்ப்புகளும் எழுந்தன.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கூறுகையில், "கட்சி நூற்றாண்டை நோக்கி நகர்வதால் இந்தக் கூட்டத்திற்கு நாங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தோம். அமர்ஜீத் கௌர் என்ற பெண் நிர்வாகியை பொதுச்செயலாளராக தேர்வு செய்து, இடது சாரி கட்சியின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பிடிப்பார் என நினைத்தோம்.
ராஜாவுக்கு எதிர்ப்பு
அதேபோல பினாய் விஷ்வம் என்கிற துடிப்பான இளைஞரை பொதுச்செயலாளராக நியமனம் செய்வார்கள் என்று எதிர்பார்த்தோம். அது எதுவுமே நடைபெறவில்லை. இந்தக் கூட்டத்தில் கட்சியில் துணைப்பொதுச் செயலாளரை தேர்வு செய்யப் போகிறார்கள் என்றும் தகவல் வெளியானது. அதுவும் நடைபெறவில்லை. டி. ராஜா தொடர்ந்து 6 வருடங்கள் அந்தப் பதவியில் இருந்துள்ளார். அவரின் பணி சொல்லிக் கொள்ளுமளவுக்கு இல்லை.
இதனால் விதிகளை தளர்த்து அவரை மீண்டும் பொதுச்செயலாளராக நியமனம் செய்ய கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநில நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். வட இந்திய நிர்வாகிகள் அவருக்கு அதிகளவு ஆதரவு தெவித்துவிட்டனர். கே.நாராணயா, செங்குப்தா உள்ளிட்ட மூத்தத் தலைவர்களே தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தலைமை பதவியில் இருப்போர் அதுபோல கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தி செயல்பட வேண்டும்." என்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications