For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகள் மீது பாசம் காட்ட வேண்டியதுதான்.. அதற்காக இப்படியா டாடி.. டூவீலர் லைசன்ஸை கட் செய்த அதிகாரிகள்

5 வயது சிறுமியை பைக் ஓட்ட அனுமதித்த தந்தையின் ஓட்டுநர் உரிமத்தை அதிகாரிகள் தற்காலிகமாக தடை செய்தனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    இருசக்கர வாகனம் ஓட்டும் 5 வயது சிறுமி-வீடியோ

    கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் 5 வயது சிறுமியை பைக் ஓட்ட அனுமதித்த தந்தையின் ஓட்டுநர் உரிமத்தை அதிகாரிகள் தற்காலிகமாக தடை செய்தனர்.

    கொச்சியில் பெரும்படப்பையை சேர்ந்தவர் ஷிபு பிரான்சிஸ். இவர் நேற்றைய தினம் தனது 5 வயது பெண் குழந்தையை பைக்கில் முன்பகுதியில் நிற்க வைத்து கொண்டார்.

    Dad allows 5 year old ride bike in Kochi

    அந்த குழந்தைக்கு பின்னர் இன்னொரு குழந்தை, அதன் பின்னர் பிரான்சிஸ், அவரது மனைவி என இரு சக்கர வாகனத்தில் எங்கோ சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக கார் ஓட்டி வந்த ஒருவர் இவர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    காரணம் பைக்கை ஓட்டியது பிரான்சிஸ் அல்ல, அவரது 5 வயது மகள். இதனால் அவர் உடனடியாக தனது செல்போனில் இதை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பினார்.

    இதையடுத்து வைரலான இந்த வீடியோ மோட்டார் வாகன அலுவலக அதிகாரிகளின் கண்களிலிருந்து தப்பவில்லை. அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட பிரான்சிஸ்ஸை அழைத்து எச்சரித்ததோடு அவரது லைசன்ஸ்ஸையும் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்தனர்.

    English summary
    The motor vehicles department in Kochi has suspended the two-wheeler license of one who allows his 5 years old daughter to ride the bike.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X