குஜராத்தில் கொடூரம்! தலித் சிறுமி உயிரோடு எரித்துக் கொலை!!
அகமதாபாத்: உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் 15வயது தலித் சிறுமியை மர்ம நபர்கள் உயிரோடு எரித்துக் கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் தலித் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்படுவது, உயிரோடு எரிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதேபோல் மத்திய பிரதேசத்திலும் தலித்துகளுக்கு எதிராக சம்பவங்கள் அதிர வைத்துக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் குஜராத்தில் தலித் சிறுமி உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. குஜராத்தின் சுரேந்தர்நகர் மாவட்டத்தில் சய்லா நகரில் இருக்கிறது அம்பேத்கர் நகர். அப்பகுதியில் 15 வயது தலித் சிறுமி ஒருவர் சாக்கடையை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மோதிபாய் சுனேரா என்பவர் தலைமையிலான 8 பேர் கொண்ட கும்பல் அந்த சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளது. இதை அப்பெண் மிகக் கடுமையாக எதிர்த்து போராடியிருக்கிறார்.
அந்த நேரத்தில் வன்முறை கும்பல் திடீரென சிறுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்தது. படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்று தெரிய வந்தும் இன்னமும் அவர்களை போலீசார் கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications