"தலித் இளைஞர்".. மரத்தில் கட்டி வைத்து.. "மர்ம உறுப்பில்" அடித்து.. உ.பியில் அதிர வைக்கும் ஷாக்!
தலித் இளைஞரை கட்டி வைத்து தாக்கி உள்ளது ஒரு கும்பல்
கான்பூர்: உபியில் நடக்கும் அராஜகத்துக்கு ஒரு அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது.. ஒரு தலித் இளைஞனை மரத்தில் கட்டி வைத்து, அவரது மர்ம உறுப்பில் கம்பை நுழைத்து, கொடுமைப்படுத்தி உள்ளனர்.. அலறி அலறி துடித்த அந்தஇளைஞன் ஒரு தலித் ஆவார்..!
உத்தரபிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அந்த இளைஞனுக்கு 20 வயதுதான் ஆகிறது.. அவர் ஒரு தலித்.. ஏதோ காதல் விவகாரம் போலும்.. அதனால், அந்த இளைஞனை கட்டி வைத்து ஊர் மக்கள் அடித்து தாக்கி உள்ளனர்.
இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி உள்ளது.. அதில், ஏதேதோ கேள்விகளை கேட்டுக் கொண்டே அந்த இளைஞனை கொடூரமாக ஒரு கும்பல் அடிக்கிறது.. அப்போது ஒருவர், இளைஞனிடம் சாதி என்ன என்று கேட்கிறார்..

சாதி
அந்த இளைஞர் தன்னுடைய சாதியை சொன்னதும், இந்த கும்பலுக்கு ஆத்திரம் மண்டைக்கேறுகிறது. இன்னும் கொடூரமாக அடிக்க தொடங்குகிறார்கள்.. சிலர் கீழே கிடந்த கல்லை எடுத்து, அந்த இளைஞனை தாக்குகிறார்.. இளைஞனோ வலி பொறுக்க முடியாமல் கதறுகிறார்.. அழுகிறார்.. ஆனாலும் மனசாட்சியே இல்லாமல், இளைஞனின் தலைமுடியை இழுத்தும், முழங்கைகளை முறித்தும் தாக்குகிறார்கள்..

மர்ம உறுப்பு
இன்னொரு வீடியோவில், இந்த இளைஞனை ஒரு மரத்தில் கட்டி போட்டுவிட்டு, ஒரு கம்பை எடுத்துவந்து, இளைஞனின் பின்பக்க மர்ம உறுப்பில் நுழைத்து சித்ரவதை செய்கிறார்கள்.. அந்த இளைஞன் வலியால அலறுவது நெஞ்சை பதற செய்கிறது. இந்த வீடியோதான் இணையத்திலும் வைரலாகி மொத்த பேருக்கும் அதிர்ச்சியை தந்துவருகிறது.. 2 நாட்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது..

குற்றவாளிகள்
அந்த இளைஞன் இப்போது கான்பூர் ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலைமையில் இருக்கிறார்.. தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.. இதுகுறித்த தகவல்கள் போலீசுக்கும் விஷயம் போயுள்ளது..உடனடியாக குற்றவாளிகளை பிடிக்க டீம் இறக்கப்பட்டது.. வழக்கு பதிவு செய்து, அந்த வீடியோவில் அடையாளம் காணப்பட்ட ஒருவரை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர்.. மேலும் சிலரை தேடி வருகின்றனர்..

சேலை
இப்படித்தான், இதே உபியில் நேற்று முன்தினம் சமாஜ்வாடி கட்சி பெண் ஊழியர் ஒருவரின் சேலையை பிடித்து இழுத்து, மானப்பங்கப்படுத்தி அட்டகாசம் செய்துள்ளனர்.. அந்த பெண் வேட்பு மனு தாக்கல் செய்ய போயுள்ளார்.. அதை தடுப்பதற்காகவே, இன்னொரு கட்சியினர் அங்கு வந்து, பெண்ணின் புடவையை உருவி அசிங்கப்படுத்தி அமர்க்களம் செய்தனர்..

ராமராஜ்ஜியம்
இந்த வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இப்போது தலித் இளைஞரின் வீடியோ அதற்கு மேல் அதிர்ச்சியை தூக்கி வாரிப்போட்டுள்ளது. "ராமராஜ்ஜியம் அமைத்தே தீருவேன்" என்று முழக்கமிட்டு கொண்டே இருக்கும் யோகியின் ஆட்சியில் இன்னும் என்னவெல்லாம் கொடுமை நடக்க போகிறதோ?!












Click it and Unblock the Notifications