சரணடைய விரும்பிய தாவூத்! ஏற்றுக் கொள்ளாத சி.பி.ஐ: டெல்லி முன்னாள் போலீஸ் கமிஷனர் 'திடுக்' தகவல்
டெல்லி: மும்பை தாக்குதலைத் தொடர்ந்து நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் சரணடைய விரும்பிய போதும் சில காரணங்களால் சி.பி.ஐ. ஏற்கவில்லை என்று டெல்லி முன்னாள் போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் திடுக்கிடும் தகவலைத் தெரிவித்துள்ளார்.
மும்பை தாக்குதல் நடைபெற்று 15 மாதத்திற்கு பிறகு பிரபல கடத்தல் மன்னன் தாவூத் இப்ராஹிம் சரணடைய தயார் என தெரிவித்து சிபிஐ டிஐஜி நீரஜ் குமாரிடம் பேசி உள்ளான். ஆனால் சில காரணங்களுக்காக இதை சிபிஐ ஏற்று கொள்ளவில்லை என மும்பை போலீஸ் கமிஷன்ர் தெரிவித்து உள்ளார்.

டெல்லி போலீஸ் கமிஷனராக இருந்த நீராஜ் குமார் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜுலை மாத ஓய்வு பெற்றார். சிபிஐயின் மும்பை குண்டு வழக்கு விசாரணையில் நீராஜ் முன்னணி அதிகாரியாக இருந்தவரும் கூட.
இவர் தமது ஓய்வுக்கு பிறகு புத்தகம் ஒன்றை எழுதி வருகிறார். அதில் தனது 37 ஆண்டு கால போலீஸ் பணியில் சந்தித்த குற்றவாளிகள் குறித்தும் நிழல் உலக தாதாக்கள் குறித்து எழுதி உள்ளார்.
இப்புத்தகம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகிறது. புத்தகத்தை பென் குயின் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்த புத்தகத்தில் நீராஜ் குமார் கூறியுள்ள சில தகவல்கள்:
- 1993ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் நடைபெற்ற 15 மாதங்களுக்குப் பின்னர் பதற்றத்துடன் இருந்த தாவூத்துடன் 1994 ஜூன் மாதம் 3 முறை பேசினேன்.
- அப்போது அவன் சரணடையும் எண்ணத்துடன் இருந்தான் ஆனால் அவனிடம் ஒரு கவலை இருந்தது. இந்தியா திரும்பும் போது தன்னை எதிர் கும்பல தீர்த்து கட்டுவார்கள் என்பதால் சி.பி.ஐ, பாதுகாப்பு கோரியிருந்தான்.
- என்னுடைய மூத்த அதிகாரிகள் தாவூத்துடனான தொலைபேசி தொடர்புகளை துண்டித்து கொள்ளுமாறு எனக்கு அறிவுறுத்தினர்.
- தாவூத் தொடர்ந்து என்னை தொடர்பு கொள்ள முயற்சி செய்தான்..ஆனால் என்னிடம் அதிகாரம் இல்லை என்பதால் நான் அவனுடன் பேசுவதை விலக்கி கொண்டேன்."
- ஏற்கெனவே மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி "இந்தியாவின் தேடப்படும் குற்றவாளி தான் சரணடைய விருப்பம் தெரித்து இருந்தார். ஆனால் அவரின் நிபந்தனைகளான துன்புறுத்த கூடாது; தன்னை வீட்டு காவலில் வைக்க வேண்டும் ஆகியவற்றை அரசு ஏற்று கொள்ள வில்லை" என கூறி இருந்தார் எனபது குறிப்பிட தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications