அம்ரித்பால் சரணடைந்தாரா? பஞ்சாப் போலீஸ் துப்பாக்கி முனையில் வளைத்து கைது செய்ததா? நடந்தது என்ன?
அமிர்தசரஸ்: காலிஸ்தான் பயங்கரவாதி அம்ரித்பால் சிக்கிய விவகாரத்தில் பல்வேறு முரண்பட்ட கருத்துகள், விவாதங்கள் நடந்து வருகின்றன. பஞ்சாப் போலீசாரால் அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டார் என அம்மாநில அரசு கூறுகிறது; ஆனால் சரணடைய வைத்தோம் என அகாலிதளம் நிர்வாகிகள் வாதிடுகின்றனர்.
பஞ்சாப் தனிநாடு கோரும் காலிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அம்ரித்பால் சிங். இவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் சுமார் 16 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அமிர்த்பால் சிங்கை கடந்த ஒரு மாதமாக பஞ்சாப் போலீசார் தேடி வருகின்றனர். தமது உருவம், உடையை மாற்றிக் கொண்டு பல்வேறு வாகனங்களில் பஞ்சாப் மாநிலம் முழுவதும் ஓடிக் கொண்டே இருந்தார் அம்ரித்பால் சிங்.

அம்ரித்பால்சிங்குக்கு உதவியவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் அம்ரித்பால் சிங் சிக்கவே இல்லை. இந்த நிலையில்தான் காலிஸ்தான் பயங்கரவாதிகள் இயக்கத் தலைவனாகிய பிந்தரன் வாலே பிறந்த ஊரான ரொட் அல்லது ரோட் கிராமத்தில் அம்ரித்பால்சிங் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
தற்போது அம்ரித்பால் கைது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. அதாவது அம்ரித்பால் சிங்கை ரொட் கிராமத்தில் போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்தனர்; ஒரு துப்பாக்கி தோட்டா கூட பயன்படுத்தாமல் லாவகமாக அம்ரித்பால் சிங்கை கைது செய்துவிட்டோம் என பெருமிதம் பேசுகின்றனர் பஞ்சாப் போலீஸ். ஆளும் ஆம் ஆத்மி அரசு தலைவர்களும் இதே கருத்தை முன்வைத்து பேசி வருகின்றனர்.
ஆனால் சிரோமணி அகாலி தளம் கட்சியோ இதில் மாறுபடுகிறது. அம்ரித்பால்சிங் ரொட் கிராமத்துக்கு வருவதாக எங்களிடம்தான் தெரிவித்தார்; அவர் போலீசில் சரணடைய விரும்புவதாகவும் கூறினார். இதனையே நாங்கள் போலீசுக்கு தெரிவித்தோம். இதனடிப்படையில்தான் ரொட் கிராமத்தை போலீஸ் சுற்றி வளைத்தது. உண்மையில் போலீசிடல் அம்ரித்பால்சிங் கைது செய்யப்படவில்லை; சரணடைந்தார். இதற்கு நாங்கள்தான் உதவி செய்தோம் என்கின்றனர். இப்போது பஞ்சாப் அரசியலில் இதுதான் அனலடிக்கும் வாதமாக இருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications