For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆவேசமாக பேசிய ராகுலுக்கு கோப பார்வையில் ஆக்ரோஷமாக பதிலளித்த நிர்மலா.. களைக்கட்டிய நாடாளுமன்றம்!

நாடாளுமன்றத்தில் சரமாரியாக குற்றச்சாட்டுக்களை கூறிய ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆக்ரோஷமாக பதில் கூறினார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மக்களவையில் அனல் பரந்த ராகுல் காந்தியின் பேச்சு...பாஜக அமளி...வீடியோ

    டெல்லி: நாடாளுமன்றத்தில் சரமாரியாக குற்றச்சாட்டுக்களை கூறிய ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோப பார்வையுடன் ஆக்ரோஷமாக பதில் கூறினார். மேலும் மத்திய அரசு மீதான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்களை கண்டித்து பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

    மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

    இதனை பிஜு ஜனதா தளம், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி விவாதத்தின் போது பேச தொடங்கினார்.

    பெரும் அமளி

    பெரும் அமளி

    அப்போது மத்திய அரசு மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை அவர் அடுக்கினார். இதற்கு பாஜக எம்பிக்கள் முழக்கமிட்டதால் நாடாளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.

    ரூ.15 லட்சம் எங்கே?

    ரூ.15 லட்சம் எங்கே?

    ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் தருவதாகக் கூறி ஏமாற்றியுள்ளார் மோடி.

    மவுனம் காப்பது ஏன்?

    மவுனம் காப்பது ஏன்?

    விவசாயிகளும், இளைஞர்களும் மத்திய அரசின் பொய் வாக்குறுதிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமித்ஷா மகன் ஜெய் ஷா விவகாரத்தில் மத்திய அரசு மெளனம் காப்பது ஏன்?

    விளாசிய ராகுல்

    விளாசிய ராகுல்

    ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பிரதமர் மோடி ஏமாற்றம் மட்டுமே அளித்துள்ளார் என விளாசி தள்ளினார் ராகுல் காந்தி.

    கோப பார்வையில் ஆக்ரோஷ பதில்

    கோப பார்வையில் ஆக்ரோஷ பதில்

    மேலும் ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் மோடியின் நண்பர் பலனைடந்துள்ளார் என்றும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். இதனால் ஆத்திரமடைந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராகுல் காந்தியை நோக்கி கோப பார்வை வீசியதோடு கையை நீட்டி மிக ஆக்ரோஷமாக பதிலளித்தார்.

    பாஜகவினர் அமளி

    பாஜகவினர் அமளி

    இதைத்தொடர்ந்து நிர்மலா சீதாராமனை அமைதி காக்கும்படி கூறினார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன். இருப்பினும் பாஜகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.

    English summary
    Defence Minister Nirmala Seetharaman tensed over Rahul gandhi accusation on Central govt.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X