ரூ.5 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்... இரு ராணுவ வீரர்கள் உள்பட மூவர் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் ரூ. 5 கோடி மதிப்பிலான ஹெராயின் வைத்திருந்ததாக இரு ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

டேராடூனில் ஒரு காரில் ஹெராயின் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து
போதை பொருள் தடுப்பு குழு, ராணுவ புலனாய்வு குழு , போலீஸார் அடங்கிய குழு வாகன சோதனையில் ஈடுபட்டது. அப்போது அந்த வாகனத்தில் ஒரு கிலோ எடை கொண்ட ஹெராயின் எனும் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Dehradun: Two Army jawans arrested with heroin worth Rs 5 crore

இதன் மதிப்பு ரூ. 5 கோடியாகும். போதை வஸ்துகளை கடத்திய ராஜூ ஷேக், பூல் சிங் யாதவ் மற்றும் மஞ்சு ரஹ்மான் ஆகிய மூவரை போலீஸார் கைது செய்தனர். அவர்களில் ராஜுவும், பூல் சிங்கும் ராணுவ வீரர்களாவர். மற்றொருவர் ராஜுவின் உறவினர்.

இதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த துப்பாக்கியும், 13 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மூவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dehradun Police have arrested two Army jawans and one other with heroin worth Rs five crore. A revolver along with 13 live cartridges were also seized from their possession.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற