For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விரலில் மை வைக்கும் முறை டெல்லியில் அறிமுகம்

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவோருக்கு விரலில் மை வைக்கும் பணி டெல்லி வங்கிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Google Oneindia Tamil News

டெல்லி: வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவோருக்கு அடையாள மை வைக்கும் பணி தொடங்கியது.

கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக கடந்த 8ஆம் தேதி நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து மக்கள் புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

Delhi banks introduced ink on the finger to prevent multiple withdrawals

இதில் கறுப்புப்பணம் வைத்திருக்கும் நபர் அடிக்கடி பணத்தை மாற்றுவதை தடுக்கும் வகையில் விரலில் அடையாள மை வைக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று விரலில் மை வைக்கும் பணி தொடங்கியது.

தேர்தல் நடக்காத இடங்களில் பணம் மாற்றுபவர்களின் இடது கை ஆள்காட்டி விரலில் அடையாள மை வைக்கப்பட்டது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வலது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படுகிறது. விரலில் மை வைத்த பிறகே பணம் மாற்றிக்கொடுக்கப்படுகிறது.

English summary
To prevent multiple withdrawals delhi and north states bank introduced ink on the finger.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X