For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

20 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது- ஜனாதிபதி உத்தரவும் ரத்து:டெல்லி ஹைகோர்ட் அதிரடி

20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கம் செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    20 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது-டெல்லி உயர்நீதிமன்றம்- வீடியோ

    டெல்லி: 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை செல்லாது என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த ஜனாதிபதியின் உத்தரவையும் டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

    ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 20 பேர் அமைச்சர்களின் நாடாளுமன்ற செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் இரட்டை ஆதாய பதவி வகித்ததாக புகார் எழுந்தது.

    Delhi HC sets aside the ECI recommendations to disqualify the 20 AAP MLAs

    இதனை விசாரித்த தேர்தல் ஆணையம் 20 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய ஜனாதிபதிக்கு பரிந்துரைத்தது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை எதிர்த்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை செல்லாது என அதிரடியாக தீர்ப்பளித்தது.

    அத்துடன் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து ஜனாதிபதி ராம்கோவிந்த் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

    English summary
    Delhi High Court sets aside the ECI recommendations to disqualify the 20 AAP MLAs in connection to the office of profit.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X