நடிகைகளுக்கு கார் வாங்க பல கோடி பணம்... மாஜி தேசிய கட்சி தலைவரின் லீலை.. டெல்லி ஷாக்!
தேசிய கட்சியில் வலம் வரும் நடிகைகளுக்கு கார்கள் வாங்க பல கோடி ரூபாய் கட்சிப் பணத்தை மாஜி தலைவர் அள்ளி வீசியது கண்டு டெல்லி மேலிடம் கடும் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளதாம்.
சென்னை: தேசிய கட்சி ஒன்றின் தமிழ் நடிகைகளுக்கு கார்கள் வாங்க கோடிக்கணக்கில் கட்சி பணத்தை மாஜி தலைவர் 'அள்ளி வீசி'யிருப்பதை கண்டுபிடித்த டெல்லி மேலிடம் படுபயங்கரமாக அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதாம்.
தேசிய கட்சி ஒன்றின் தமிழக பிரிவில் கட்சித் தலைவருக்கு என கணிசமான நிதி உள்ளது. இந்த நிதியை தலைவர் மற்றும் பொருளாளர் இருவரது அனுமதியுடன் பயன்படுத்திக் கொள்ள முடியுமாம்.
சில காலத்துக்கு முன்னர் தலைவர் பொறுப்பில் இருந்த ஒரு மூத்தவர் கட்சி நிதியை சூட்கேசுடன் எடுத்துச் சென்றதாகவும் சர்ச்சை வெடித்தது. தற்போது இந்த கட்சி நிதி புதிய பஞ்சாயத்தை கிளப்பியுள்ளது.

தேர்தல் பணம் ஸ்வாகா
சட்டசபை தேர்தலின் போது கொடுக்கப்பட்ட பல கோடி ரூபாயை மாஜி தலைவர் ஸ்வாகா செய்துவிட்டாராம். அவர் கட்சி நிதி தொடர்பாக நல்லவரைப் போல டெல்லி மேலிடத்தில் கணக்குகளையெல்லாம் 'பக்கா'வாக கொடுத்திருந்தாராம்.

கோல்மால் கணக்குகள்
இந்த கணக்குகளை ஆற அமர உட்கார்ந்து டெல்லி மேலிடம் அலசி ஆராய்ந்ததால் ஒன்றுமே புரிபடவில்லையாம். எல்லாமே கோல்மால் கணக்குகள் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக புரிந்ததாம்.

நடிகைகளுக்கு கார்கள்
பின்னர் டெல்லி மேலிடம் இது தொடர்பாக ரகசிய விசாரணை நடத்தியது. இதில் நடிகைகளுக்கு கார் வாங்கித் தருவதற்கு பல கோடி ரூபாயை கட்சி நிதியில் இருந்து தானம் அளித்திருக்கிறாராம் மாஜி தலைவர். அதாவது போக்குவரத்து அலவென்சு போல இந்த பணம் வழங்கப்பட்டுள்ளதாம்.

இப்போது வந்துள்ளது ஓலை
அத்துடன் மாஜி தலைவர் தமது பாக்கெட்டில் போட்ட பணமும் கோடிகளைத் தாண்டுகிறதாம். இதற்கெல்லாம் எங்கே கணக்கு என கேட்டு இப்போதுதான் ஓலை வந்துள்ளதாம். ஓலை வந்தால் என்ன? ஜெயிலிலா போடுவார்கள் என்கிறதாம் மாஜி தலைமை ஜால்ராக்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications