For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

60 வயதான பெண்ணை பலாத்காரம் செய்த குற்றவாளி விடுதலை!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் 60 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை டெல்லி ஹைகோர்ட் ரத்து செய்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2010 இல் டெல்லியில் வீட்டு வேலை செய்த 60 வயது பெண்ணை ஆச்சிலால் என்பவர் மது போதையில் பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதில் அந்த வேலைக்கார பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆச்சிலாலுக்கு ஆயுள் தண்டனை:

இந்த வழக்கில் டெல்லி விசாரணை கோர்ட் ஆச்சிலாலுக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்:

இதை எதிர்த்து அவர் டெல்லி ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் பிரதீப் நந்த்ராஜோக், முக்தா குப்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்தது.

மது போதையால் வந்த வினை:

அத்தீர்ப்பில், "ஆச்சிலால் மது போதையில் பலவந்தமாக செக்ஸ் வைத்திருக்கிறார். பாலியல் பலாத்காரம் செய்யவில்லை. அந்த பெண்ணை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை.

கொலை செய்யும் நோக்கமில்லை:

தான் பலவந்தமாக செக்ஸ் வைத்துக்கொள்வதால் அந்த பெண் இறந்து விடுவார் என அவருக்கு தெரியாது. இதனால் அவரை கொலை குற்றவாளியாக கருத முடியாது. மேலும் இறந்த பெண்ணுக்கு 60 வயதாகி விட்டது.

கட்டயப்படுத்தியதாக நிரூபணம் இல்லை:

60 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறுவதை ஏற்க முடியாது.அந்த பெண்ணின் சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்தி தான் மனுதாரர் பாலியல் பலாத்காரம் செய்தார் என்பதை அரசு தரப்பு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கவில்லை.

சர்ச்சையைக் கிளப்பிய தீர்ப்பு:

எனவே பாலியல் பலாத்கார குற்றச்சாட்டிலிருந்தும் மனுதாரரை விடுவிக்க இந்த கோர்ட் உத்தரவிடுகிறது" என்று தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பினால் எல்லா தரப்பினரிடையேயும் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

அதிர்ச்சியைக் கிளப்பும் ஹைகோர்ட்:

உடலை விற்று வயிற்றைக் கழுவும் பெண்களைக் கூட அனுமதியில்லாமல் தொடக்கூடாது, மனைவியை அனுமதி இன்றி தொட்டால் கூட அது பலாத்காரம்தான் என்று கூறிவரும் நாட்டில் டெல்லி ஹைகோர்ட்டின் இந்த தீர்ப்பு அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியுள்ளது.

English summary
The Delhi High Court overturned a rape conviction, saying a woman who had injuries to her vagina and died as a result of “forceful sexual intercourse,” had not been sexually assaulted.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X