For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி மெட்ரோ ரயில்களில் பிடிபடும் பிக்பாக்கெட்டுகளில் 91% பெண்கள்!

டெல்லி மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் இந்த ஆண்டு பிக்பாக்கெட் அடித்து சிக்கியவர்களில் 91% பேர் பெண்கள் எனத் தெரியவந்துள்ளது. டெல்லியில் குற்றச்செயல்கள் தொடர்பான புள்ளிவிவரத்தில் இந்த தகவல் தெ

Google Oneindia Tamil News

டெல்லி : டெல்லியில் நடைபெறும் குற்றச்செயல்கள் தொடர்பான புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. அதில் மெட்ரோ ரயில் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த ஆண்டு பிக்பாக்கெட் அடித்து பிடிபட்டவர்களில் 91 சதவீதம் பேர் பெண்கள் எனத் தெரியவந்துள்ளது.

டெல்லி மெட்ரோ சேவை தலைநகர மக்களின் போக்குவரத்தில் முக்கியப் பங்காற்றி வருகிறது. டெல்லி மெட்ரோ ரயிலில் ஒவ்வொரு நாளும் 26 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர்.

Delhi Metro : 91% of Pick pockets are women

டெல்லி மெட்ரோ ரயில் சேவைக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு அளித்து வருகிறது. தாங்கள் பாதுகாப்பு அளிக்கும் பகுதியில் குற்றச் செயலில் சிக்குவோரை சட்டப்பூர்வ நடவடிக்கைக்காக டெல்லி போலீஸாரிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி மெட்ரோ ரயில் நெட்வொர்க் பகுதியில் இந்த ஆண்டு குற்றச் செயல்கள் தொடர்பான புள்ளிவிவரம் டிசம்பர் மாத மத்தியில் வெளியிடப்பட்டது. இதன்படி 100-க்கும் மேற்பட்ட சோதனையில் சிஐஎஸ்எப் ஈடுபட்டுள்ளது.

இதில் பிக்பாக்கெட்டில் ஈடுபட்டதாக 479 பேரை பிடிபட்டுள்ளனர். அவர்களில் 438 பேர் பெண்கள் ஆவர். மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தக் குற்றத்தில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாக்கெட்டில் ஈடுபடுபவர்கள் கையில் குழந்தையுடன் பயணம் செய்தோ அல்லது குழுவாகவோ சென்று ஆண் அல்லது பெண் பயணிகளிடம் இவர்கள் பர்ஸ் அல்லது விலையுயர்ந்த பொருட்களை திருடுவதாக கூறப்படுகிறது.

English summary
Women constitute over 91% of pickpockets apprehended by the CISF in the Delhi Metro network. The CISF apprehended a total of 479 pickpockets, out of which an overwhelming 438 were women,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X