ரூபாய்க்காக ஏங்கி ஏற்கனவே 33 பேர் பலி.. புது அறிவிப்பு எத்தனை பேரை காவு வாங்கப்போகிறதோ?
டெல்லி: ரூபாய் நோட்டு பிரச்சனையால் நாடு முழுவதும் உயிரிழப்புகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த நேரத்தில் வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுக்கு பதிலாக புதிய ரூபாயை பெறும் அளவு ரூ.2000 என குறைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தை சுரேஷ் சோனார் (40) நேற்று தன் மகள் திருமண நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக அவர் தன்னிடம் இருந்த செல்லாத நோட்டுகளை நேற்று முன்தினம் நீண்டநேரம் வரிசையில் நின்று வங்கியில் இருந்து மாற்றி எடுத்து வந்தார். இதில் உடல் சோர்வு அடைந்த அவர் இரவு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள வங்கியில் பணம் மாற்றுவதற்காக வரிசையில் காத்திருந்த 70 வயது முதியவர் ஒருவர் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் ராமச்சந்திர பஸ்வான் (70) ஓய்வூதியத்தை பெறவும், தன்னிடம் இருந்த பழைய நோட்டுகளை மாற்றவும் நேற்று அதிகாலை வங்கியில் நீண்ட வரிசையில் நின்றார். மூத்த குடிமக்களுக்கு தனியாக வரிசை இல்லாததால் பிற்பகல் 3 மணி வரை நின்ற அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அதே இடத்தில் மயங்கி விழுந்து இறந்தார்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா, சித்தூர் மாவட்டத்தில் பணத்தை மாற்றுவதற்காக நீண்ட வரிசையில் நின்ற விஜயலட்சுமி (72), ரத்னா (70) ஆகியோர் மாரடைப்பால் இறந்தனர். இதுவரை, நாடு முழுக்க 33 பேர் இப்படி உயிரிழப்பை சந்தித்துள்ளனர்.
இந்த நிலையில் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி புதிய ரூபாய் நோட்டுக்கள் பெறும் உச்சவரம்பு ரூ.4500லிருந்து ரூ.2000மாக குறைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என அரசு கூறினாலும், ஏடிஎம்கள் சரியாக செயல்படாத இந்த சூழலில், அடிக்கடி வங்கிக்கு சென்று பணம் எடுக்க வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்படும் என தெரிகிறது. ஏடிஎம்கள் சரி செய்யப்படவில்லை எனில், இன்னும் எத்தனை உயிரிழப்பை நாடு சந்திக்குமோ தெரியாது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications