For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டென்மார்க் ‘ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி’... ஆனால் இந்தியாவை விட சோமாலியா ரொம்ப ஹேப்பியாம்!

Google Oneindia Tamil News

டெல்லி: உலகிலேயே மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் டென்மார்க் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவிற்கு 118-வது இடம் கிடைத்துள்ளது.

ஐ.நா. சபையின் கீழ் இயங்குகிற ‘சஸ்டைனபிள் டெவலப்மென்ட் சொல்யூஷன்ஸ் நெட்வொர்க்' உலகிலேயே மகிழ்ச்சிகரமான 158 நாடுகளை வரிசைப்படுத்தி உள்ளது.

‘கால்லப் வேர்ல்ட் போல்' என்ற சர்வேயின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சிக்குரிய காரணிகள்...

மகிழ்ச்சிக்குரிய காரணிகள்...

அதாவது, தனிநபர் வருமானம், மனிதர்களின் ஆரோக்கியமான ஆயுட்காலம், சமூக ஆதரவு, ஊழல் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை தேர்வு செய்வதில் சுதந்திரம் ஆகியவை மகிழ்ச்சிக்கான அடிப்படை அம்சங்களாக கருதப்படுகின்றன. இவற்றின் அடிப்படையில் மகிழ்ச்சிகரமான நாடுகளைப் பட்டியலிட்டுள்ளது இந்த அமைப்பு.

டென்மார்க் முதலிடம்...

டென்மார்க் முதலிடம்...

இந்த பட்டியலில் முதல் இடத்தை டென்மார்க் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த ஸ்சுவிட்சர்லாந்து தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த இடங்களில்..

அடுத்தடுத்த இடங்களில்..

அதனைத் தொடர்ந்து 3வது இடத்தில் ஐஸ்லாந்தும், 4வது இடத்தில் நார்வேயும், 5வது இடத்தில் பின்லாந்தும் உள்ளன. ஆஸ்திரேலியா, இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் இப்பட்டியலில் முறையே 9, 11, 13 ஆகிய இடங்களைப் பிடித்துள்ளன.

சோமாலியா...

சோமாலியா...

இதேபோல், வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் சோமாலியா இந்தப் பட்டியலில் 76வது இடத்தில் உள்ளது. சீனா 83வது இடத்திலும், பாகிஸ்தான் 92வது இடத்திலும், ஈரான் 105வது இடத்திலும், பாலஸ்தீனம் 108வது இடத்திலும், வங்காளதேசம் 110வது இடத்திலும் உள்ளது.

118வது இடத்தில் இந்தியா...

118வது இடத்தில் இந்தியா...

இதில் அதிர்ச்சி அளிக்கக் கூடிய விசயம் என்னவென்றால், இந்தப் பட்டியலில் பாகிஸ்தான், வங்காளதேசத்தை விட இந்தியா பின்தங்கி 118-வது இடத்தை பிடித்துள்ளது.

மக்கள் ஹேப்பி...

மக்கள் ஹேப்பி...

அதாவது இந்திய மக்களை விட தீவிரவாதத்தாலும், அரசியல் குழப்பத்தாலும், உள்நாட்டு போராலும் இன்னும் பல வகையிலும் ஸ்திரமற்ற நிலையில் உள்ள பாகிஸ்தான், வங்காளதேசம், உக்ரைன், பாலஸ்தீனம், ஈராக் உள்ளிட்ட நாட்டில் வாழும் மக்கள் மகிழ்ச்சிகரமாக வாழ்வதாக இந்த பட்டியல் கூறுகிறது.

அழுவாச்சி நாடுகள்...

அழுவாச்சி நாடுகள்...

இதேபோல், உலகிலேயே மகிழ்ச்சி குறைந்த 5 நாடுகள் பட்டியலில் டோகோ, புரூண்டி, சிரியா, பெனின், ருவாண்டா இடம் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Denmark is the world's happiest country while Burundi is the least happy, according to a new survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X