அதிமுகவில் தினகரனுக்கு எப்போதும் இடமில்லை... சொல்லாமல் சொன்ன ஓபிஎஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தினகரன் பற்றி ஓபிஎஸ் என்ன சொல்கிறார் தெரியுமா?-வீடியோ

  டெல்லி: இரண்டு அணிகள் இணைந்துவிட்டீர்கள். மூன்றாவதாக தினகரனும் வந்தால் இணைத்துக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு ஓபிஎஸ் மறுத்து பதிலளித்துள்ளார்.

  டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் துணை முதல்வர்.

  செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் பிரதமரிடம் கட்சி ரீதியான அரசியல் மற்றும் அதிமுக-வில் உள்ள பிளவுகள் குறித்து பேசவில்லை என்றும், தமிழகத்தின் வளர்ச்சி பற்றி மட்டுமே பேசியதாக கூறினார்.

  மனவருத்தம் கிடையாது

  மனவருத்தம் கிடையாது


  அப்போது அவரிடம் சொந்த பிரச்சினைகளுக்காக பிரதமரை சந்தித்ததாகவும், எடப்பாடியின் செயல்பாடுகளில் அதிருப்தி உள்ளதால் பிரதமரிடம் முறையிட்டதாகவும் கூறப்படுவதாக செய்தியாளர்கள் கேட்டனர்.
  அதற்கு ஓபிஎஸ், இது ஊடகங்களின் கற்பனைதான் எங்களுக்குள் எந்த மன வருத்தமோ, பிரச்சினையோ கிடையாது என்று கூறினார்.

  மின் உற்பத்திக்கு நிலக்கரி

  மின் உற்பத்திக்கு நிலக்கரி

  தங்கள் உறவு சிறப்பாக உள்ளது. எந்த பிரச்சினையும் இல்லை என்று பதிலளித்த ஓபிஎஸ், யூகங்களுக்கு ஒருபோதும் பதில் தரமுடியாது என்றார். தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்காக பிரதமரை சந்தித்தாக தெரிவித்தார். தமிழகத்தின் மின்உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை ஒதுக்க மத்திய அரசிடம் கோரியதாக தெரிவித்தார். மத்திய அரசுக்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு தருவதில் எந்த தவறும் இல்லையென்றார்.

  முதல்வருக்கு மன வருத்தம் வராது

  முதல்வருக்கு மன வருத்தம் வராது

  எந்த நிபந்தனையும் இல்லாமல் தான் எடப்பாடி அணியுடன் இணைந்ததாக ஓபிஎஸ் தெரிவித்தார். தர்ம யுத்தம் முடிந்ததால் தான் அணிகள் இணைந்தன என்றார். எந்த சூழலிலும் தன்னால் முதல்வருக்கு மனவருத்தம் ஏற்படாது என்றார்.

  மூன்றாவது இணைப்பு

  மூன்றாவது இணைப்பு

  இரண்டு அணிகள் இணைந்து பிரச்சினை இல்லாமல் செல்லும் நிலையில், கட்சியை வலுப்படுத்த மூன்றாவதாக டிடிவி.தினகரன் வந்தால் அவரையும் இணைத்துக் கொள்வீர்களா என செய்தியாளர்கள் ஓபிஎஸ்சிடம் கேட்டனர்.

  இணைப்பு முடிந்து விட்டது

  இணைப்பு முடிந்து விட்டது

  அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், இரண்டு அணிகள் இணைந்த நிலையில் இனி அணிகள் இணைப்பு என்பது இல்லை. இனி அதிமுகவை வலுப்படுத்த கீழ்மட்ட அளவில் யாராவது வந்தால் மட்டுமே இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  OPS says DharmaYudham ended and it had no conditions for merger. Result of DharmaYudham is merger he says.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற