ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ம.பி. ”அகிலேஷ் யாதவ்" மகன் - 8 மணி நேர திக் திக் நிமிடங்கள்
போபால்: மத்திய பிரதேசத்தில் 30 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவனை 8 மணி நேரம் போராடி பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
மத்திய பிரதேச மாநிலம் நாராயண்பூர் பகுதியை சேர்ந்த அகிலேஷ் யாதவ் என்பவருக்கு 5 வயதில் திபேந்திரா யாதவ் என்ற மகன் உள்ளார். கிராமத்தில் உள்ள வயல் பகுதியில் அடிக்கடி விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்த சிறுவன் திபேந்திரா நேற்றும் அதேபோல் விளையாடி இருக்கிறார்.

இதனிடையே அந்த வயல்வெளியில் ஆழ்துளைக் கிணற்றுக்காக 30 அடி ஆழத்தில் குழி தோண்டி மூடப்படாமல் கிடந்தது. அதில் சிறுவன் திபேந்திரா தவறி விழுந்தான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கும் பேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பேரிடர் மீட்புப் படையினர் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவனை மீட்க கடுமையாக போராடினார். அப்போது அங்கு மழை பெய்ததால் மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. தொடர் மழையையும் பொருட்படுத்தாமல் சிறுவனை மீட்பதையே குறிக்கோளாக கொண்டு பேரிடர் மீட்புப் படையினர் செயல்பட்டனர்.
சிறுவன் விழுந்த ஆழ்துளைக் கிணற்றின் அருகாமையில் 25 அடி ஆழத்திற்கு மற்றொரு துளையை இட்டு அதன் வழியாக பக்கவாட்டில் சிறுவன் சிக்கிய துணைக்கு மற்றொரு துணை போட்டு 8 மணி நேரம் போராட்டத்துக்கு பின்னர் பத்திரமாக சிறுவனை மீட்டனர். மீட்கப்பட்ட சிறுவன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications