For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியின் "பிளாஸ்டிக் சர்ஜரி" பேச்சுக்கு வரலாற்று ஆய்வு கவுன்சில் 'குட்டு'

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: வரலாற்று உண்மைகளுக்குப் புறம்பாக பேசுவதை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சில் வலியுறுத்தி உள்ளது. யானை தலையுடன் விநாயகர் இருப்பதன் மூலம் ஆதி காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி முறையை இந்தியர்கள் பின்பற்றியதாக பிரதமர் மோடி பேசியதற்காகவே வரலாற்று கவுன்சில் குட்டு வைத்துள்ளது.

வரலாற்று அறிஞர்கள், ஆர்வலர்கள் 10 ஆயிரத்தும் மேற்பட்டோர் அங்கம் வகிக்கும் வரலாற்று ஆய்வு கவுன்சிலின் 80-ஆம் ஆண்டையொட்டி டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Do not create fresh myths: Historians tell Modi

துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி இந்த நிகழ்வில் தொடக்க உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

வரலாற்றில் அறிவியல் அணுகுமுறையைச் சிதைக்கும் முறையில் புராதன புராணங்களின் அடிப்படையில் வரலாற்றை மாற்றி எழுதக்கூடாது.

துரதிர்ஷ்டவசமாக பிரதமர் மோடியே கூட ஆதி காலத்திலேயே இந்தியர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற அறுவை சிகிச்சைகளை அறிந்திருந்தார்கள் என்றும் பின்னர்மறந்துவிட்டார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

பல்வேறு வெறித்தனமான அணுகுமுறைகளுடன் வரலாற்றைத் திருத்தி எழுதக்கூடாது. அவ்வாறு வரலாற்றைச் சிதைப்பதிலிருந்து இந்திய வரலாற்றைப் பாதுகாத்து, இந்தியாவின் பெருமையை மீண்டும் நிலைநாட்டிட வேண்டும்.

மிகவும் தான்தோன்றித்தனமான அல்லது பொறுப்பற்ற அறிக்கைகள், இந்தியா குறித்து உலக அளவில் உள்ள நல்ல பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்திவிடும்.

இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி சொன்ன சர்ஜரி கதை

பிரதமர் நரேந்திர மோடி கூட்டம் ஒன்றில் பேசுகையில்... விநாயகர் தலையில் யானையின் தலையை ஆதி காலத்திலேயே பொருத்தியிருக்கிறார்கள்..அப்படியெனில் அந்த காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி முறை இருந்திருக்கிறது. அதை நாம் மறந்துவிட்டோம் என்று கூறியிருந்தார்.

பிரதமர் மோடியின் இந்த புராணகால 'சர்ஜரி' பேச்சுக்குத்தான் வரலாற்று ஆய்வு கவுன்சில் குட்டு வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Indian History Congress has, in a resolution, criticised Prime Minister Narendra Modi's recent statement that an ancient plastic surgeon must have attached the head of an elephant on the body of Ganesha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X