• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாணவர்களே.. கவலையை விடுங்க.. இதை மட்டும் படிங்க.. மாதம் ரூ. 60 ஆயிரம் கியாரண்டி

|

டெல்லி: மாணவர்களே நீங்களே முடிவு செய்யுங்க.. நீங்க டாப் காலேஜ்ல சேர்ந்து எம்பிஏ படித்தாலோ, என்ஜினியரிங் படித்தாலோ அதற்கு 4 லட்சம் முதல் 12 லட்சம் வரை செலவு செய்றீங்க.. ஆனால் உங்களுக்கு மாதம் ஊதியம் 40000 ரூபாய் தான் கிடைக்கிறது.

ஆனால் அதேநேரம் நீங்கள் ஒரு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து ஏதேனும் ஒரு சிறப்பு படிப்பை ஒரு லட்சம் செலவில் முடித்தால் உங்களுக்கு 60 ஆயிரம் சம்பளம் கிடைக்கும்.

என்ன நான் சொல்வது ஆச்சர்யமாக இருக்கிறதா.. உண்மை தான். எலக்ட்ரீஷியன், லேப் டெக்னீசியன், ரத்தினவியலாளர் (கல் நகை தயாரிப்போர்). விஷூவல் மெர்சண்டைசர் (காட்சி ஆடை வடிவமைப்பாளர்) உள்ளிட்ட படிப்புகளுக்கு அதிகம் பேர் இப்போது தேவைப்படுகிறார்கள்.

எம்பிஏ படிப்பு

எம்பிஏ படிப்பு

ஆனால் எம்பிஏ மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு அவ்வவு தேவை இப்போது இல்லை.. எனவே நீங்கள் இவற்றில் எதை தேர்வுசெய்வீர்கள்? இன்னும் பலர் வொயிட் காலர் ஜாப்ஸ் (அழுக்குபடாத வேலை) என்று அழைக்கப்படும் வேலைகளுக்காக காரணமின்றி பல வேலைகளை இந்தியர்கள் தவிர்ப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆங்கில ஊடகமான எக்கனாமிக்ஸ் டைம்ஸ் மற்றும் டீம் லீஸ் இணைந்து கணக்கெடுப்பு நடத்தி இருக்கிறது.

நகை வடிவமைப்பாளர்

நகை வடிவமைப்பாளர்

அந்த கணிப்பில், , ஐந்து வருட அனுபவமுள்ள ஒரு ரத்தினவியலாளர் (நகை வடிவமைப்பாளர்) ஒரு மாதத்திற்கு ரூ .60,000 க்கு மேல் சம்பாதிக்கிறார், ஒரு பொறியாளர் அல்லது எம்பிஏ பட்டதாரி அல்லது உயர் படிப்பு படித்தோர், இதே வருட அனுபவத்துடன், 40,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார். ஒரு ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், உரிமம் பெற்ற எலக்ட்ரீஷியன், விஷிவல் மெர்சண்டைசர், ஒரு காட்சி ஆடை வடிவமைப்பாளர் (விஷூவல் மெர்சண்டைசர்) ஒரு மாதத்திற்கு சுமார் ரூ .60,000 க்கும் அதிமாகவே வீட்டின் அருகிலேயே சம்பாதிக்கிறார்கள்.

சம்பளங்கள் குறீத்து ஆய்வு

சம்பளங்கள் குறீத்து ஆய்வு

இந்த ஆய்வு 2016, 2017, 2018 க்கான டீம்லீஸின் தற்காலிக சம்பள விவர தகவல்கள் மற்றும் மூன்றாம் தரப்பு வேலை வாய்ப்பு நிறுவனங்களின் சம்பள தரவுத்தளங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிறுவனங்களின் திறமையான தொழிலாளர்களின் சம்பளத்துடன் டாப் 50 கல்வி நிறுவனங்களில் பயின்றவர்களுடன் நடந்த ஒப்பிப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

தொடக்க நிலையிலேயே

தொடக்க நிலையிலேயே

தொழிற்துறை வேலை சம்பளம் பொறியியல் மற்றும் எம்பிஏ கல்வி பெற்றவர்களின் சம்பளத்தை விட தொடர்ந்து உயர்ந்துள்ளது என்று டீம் லீஸ் சர்வீசஸின் கோஃபவுண்டர் ரிதுபர்ணா சக்ரவர்த்தி கூறுகிறார். மேலும் தொழில் திறனுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. தொடக்க நிலை பணியாளர்களுக்கான தேவைகள் மற்றும் ஒப்பீடுகள் திடுக்கிட வைக்கின்றன.

அதிக ஊதியம்

அதிக ஊதியம்

ஆடைத் தொழிலில் 0-2 ஆண்டுகள் அனுபவம் கொண்ட விஷுவல் மெர்சன்டைசருடன் ஒரு எம்பிஏ அல்லது அதே அளவிலான அனுபவமுள்ள மின் பொறியியலாளரை விட அதிக பணம் கிடைத்தது.

நெட்வொர்க் என்ஜினியர்

நெட்வொர்க் என்ஜினியர்

ஒரு திறமையான எலக்ட்ரீஷியனின் சம்பளம் (5+ வருட அனுபவத்துடன்) 2016 ஆம் ஆண்டில் மாதத்திற்கு ரூ .27,250 லிருந்து 2018 ஆம் ஆண்டில் ரூ .39,500 ஆக உயர்ந்தது, இதேபோல் ஒரு நெட்வொர்க் தொழில்நுட்ப வல்லுநர் 2018 ஆம் ஆண்டில் ரூ .51,600 ஐ பெற்று செல்ல முடிகிறது. ஆனால் பொறியியலாளர்ர்களை மறுபுறம், ஒப்பிடும்போது 2018 இல் மாதத்திற்கு ரூ .41,500 தான் கிடைத்திருக்கிறது.

எம்பிஏ, பிஇக்கு குறைவு

எம்பிஏ, பிஇக்கு குறைவு

எட்டு வருட அனுபவத்திற்குப் பிறகும் தொழிற்கல்வி ஊழியர்களுக்கான சம்பள அளவு தொடர்ந்து உயர்ந்தது. 15 ஆண்டுகளை கணக்கிடும் போது ரத்தினங்கள் மற்றும் நகைகள் துறையில் பணிபுரியும் ஒரு ரத்தினவியலாளருடன்,. பெரிய நிறுவனங்களில் வொயிட் காலர் வேலையில் உள்ளவர்களைவிட அதிகம் ஆகும். இதேபோல் ஆடை வடிவமைப்பாளர், ஆட்டோமொபைல் தொழில்நுட்ப வல்லுநர், நெட்வொர்க் டெக்னீசியன், கட்டுமானத் துறையில் சர்வேயர் ஆகியோர், மார்க்கெட்டிங் எம்பிஏ படித்தவர்களை விடவும், ஒரு பொறியியல் என்ஜினியரைவிடவும் 15 ஆண்டுகளில் அதிக பணம் பெறுகிறார்கள்.

விருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,
இன்றே பதிவு செய்யுங்கள்
- பதிவு இலவசம்!

 
 
 
English summary
do you want study mba? why you not electrician? : vocational training jobs give high salary compare then MBA or BE
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more