For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூகுள் கொண்டாடும் “நேரு மாமா” பர்த்டே- குழந்தைகள் தினத்தின் சிறப்பு டூடுள்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் இன்று கொண்டாடப்படும் "குழந்தைகள் தின"த்தினை முன்னிட்டு அதனை கூகுளும் தனக்கே உரித்தான பாணியில் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றது.

குழந்தைகளைக் குஷிப்படுத்தும் வகையில் ஒரு குழந்தையின் கைவண்ணத்தினையே இன்றைய "கூகுள் டூடுள்" ஆக வைத்துள்ளது.

டூடுள் 4 கூகுள் வெற்றியாளாரான வைதேகி ரெட்டியின் வண்ணமயமான, இயற்கை வளங்களின் செழிப்பை கொண்ட அசாம் மாநிலத்தின் ஓவியத்தை வர்ணிக்காமல் இருக்க முடியாது.

நேரு மாமாவின் பிறந்தநாள்:

நேரு மாமாவின் பிறந்தநாள்:

ஒவ்வொரு வருடமும், நம்முடைய முதலாவது பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 14 ஆம் நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகின்றது

இந்தியாவின் வருங்காலம்:

இந்தியாவின் வருங்காலம்:

குழந்தைகளிடம் அவர் காட்டிய அன்பும், அரவணைப்பும்தான் இன்றுவரை குழந்தைகள் அவரை அன்புடன் "நேரு மாமா" என்று அழைக்க வைத்துள்ளது.அவர் ஒவ்வொரு குழந்தைகளையும் இந்தியாவின் எதிர்காலமாக பார்த்து வந்தார்.

125ஆவது பிறந்தநாள் விழா:

125ஆவது பிறந்தநாள் விழா:

இன்று அவருடைய 125ஆவது பிறந்தநாள் "குழந்தைகள் தினம்" ஆக அனுசரிக்கப்படுகின்றது. அதனைத்தொடர்ந்துதான் அவருக்கான மரியாதையை அவருடைய எதிர்கால கனவினை வைத்தே அளித்துள்ளது.

 கூகுள் டூடுள் போட்டி:

கூகுள் டூடுள் போட்டி:

கூகுள் இந்தியா இந்த "டூடுள் 4" போட்டியை 6 ஆவது முறையாக நடத்தியுள்ளது. இப்போட்டியில் கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான தலைப்பு "இந்தியாவில் நான் ரசிக்க விரும்பும் இடங்கள்".

கடைசி சுற்றில் 12 பேர்:

கடைசி சுற்றில் 12 பேர்:

இந்த தலைப்பின் அடிப்படையில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளும் ஓவியம் தீட்டி இருந்தனர். அதில், கடைசி சுற்றில் பங்கேற்ற 12 குழந்தைகளில் வெற்றிபெற்ற வைதேகியின் ஓவியம்தான் இந்த குழந்தைகள் தினத்தில் கூகுள் டூடுளாக இடம்பிடித்துள்ளது.

வெற்றியாளர் வைதேகி:

வெற்றியாளர் வைதேகி:

அவர் "அசாமின் இயற்கையும், கலாச்சாரமும்" என்ற வகையில் தன்னுடைய ஓவியத்தினை தீட்டி இருந்தார். அதுதான் இன்றைய கூகுளின் முகப்புப் பக்கத்தில் ஜொலிக்கின்றது டூடுளாக.

அழகு கொஞ்சும் அசாம்:

அழகு கொஞ்சும் அசாம்:

குழந்தைகள் தின சிறப்பு டூடுளான இது, நமக்கு வடகிழக்கு மாநிலங்களின் அழகினை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது.

குழந்தைகளை போற்றுவோம்:

குழந்தைகளை போற்றுவோம்:

இந்த ஓவியத்தில் காடுகளின் அழகு, கம்பீரமான புலி, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், அசாமின் பழமைவாய்ந்த "பிகு" நடனம் ஆடும் பெண்மணி, மூங்கில் மரங்கள், தேயிலைப் பைகள், அவற்றின் பசுமை என்று வண்ணமயாக அழகினைத் தூவியுள்ள இந்த ஓவியத்தினை ரசித்துக் கொண்டே இந்த குழந்தைகள் தினத்தில் ஒவ்வொரு குழந்தையின் ரசனைகளையும், ஆசைகளையும் போற்றுவோம்...

கூகுளுடன் இணைந்து அனைத்து எதிர்கால சந்ததியினருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!

English summary
Google’s idea of celebrating Children’s Day has only made us a fan of theirs for they used a child’s creation as the doodle of the day. Doodle 4 Google winner Vaidehi Reddy’s idea of a depicting the colourful and aesthetically rich state of Assam in Google Doodle is commendable.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X