சென்னை மெயில் உட்பட 6 ரயில்கள் ரத்து! விபத்து எதிரொலியாக திருப்பி விடப்பட்ட 5 ரயில்கள்: முழு லிஸ்ட்!
புவனேஸ்வர் : ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட 3 ரயில்கள் மோதி தடம்புரண்டு விபத்திற்குள்ளான நிலையில், கொல்கத்தாவில் இருந்து இயக்கப்படும் சென்னை மெயில் உட்பட 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஓடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே பஹாந்தா என்ற பகுதியில் வனப்பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே நேருக்கு நேராக வந்த சரக்கு ரயிலுடன் மோதியது.

சிக்னல் கோளாறு காரணமாக இரண்டு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் பயணித்ததால் விபத்து நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இன்னொரு ரயிலும் அதே வழித்தடத்தில் வந்து மோதியதாக தகவல் வெளிவாகியுள்ளது.
இந்த விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்த ரயில்வே போலீசார் மற்றும் மீட்பு படையினர், மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு 60 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. காயமடைந்த நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இரவு நேரத்தில் வனப்பகுதியில் விபத்து நடந்துள்ளதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது.
விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு படையின் மூன்று பிரிவு மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையின் நான்கு பிரிவும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஒடிசா மாநிலத்தில் விபத்திற்குள்ளான கோரமண்டல் ரயிலில் சென்னைக்கு வருவதற்காக 869 பயணிகள் முன்பதிவு செய்து பயணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து காரணமாக 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் ஹவுராவில் இருந்து இயக்கப்படும் சென்னை மெயில் உட்பட 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொல்கத்தாவில் இருந்து புரி, சென்னைக்கு வரும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ரயில் விபத்து எதிரொலியாக மேலும் 5 ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1 ரயில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
