For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேஸ்புக், டுவிட்டரில் 5 மாநில தேர்தல் முடிவுகள் 'லைவ்': தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: முதன்முறையாக தேர்தல் முடிவுகளை சமூக வலைத்தளமான பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் வெளியிட இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களின் அன்றாட வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ள இணையதளத்தில், சமூக வலைதளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்தவகையில், அரசியல் கட்சிகளும் தங்களது வாக்குச் சேகரிக்கும் யுக்தியில் சமூக வலைத்தளங்களை தங்களது களங்களாகப் பயன் படுத்தத் தொடக்கியுள்ளன.

தற்போது அதனைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையமும் நடைபெற உள்ள 5 மாநில தேர்தல் முடிவுகளை பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த மாதம் 8ம் தேதி, டெல்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகளை பொதுமக்கள் விரைவாக அறிந்து கொள்ளும் வகையில் ‘பேஸ்புக்', ‘டுவிட்டர்' இணையதளங்களில் வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

அதன்படி குறிப்பிட்ட தொகுதியின் தேர்தல் முடிவுகள் மற்றும் வேட்பாளர்களின் முன்னணி நிலவரம் குறித்த அனைத்து விவரங்களும் தேர்தல் ஆணையத்துக்கு சொந்தமான ‘பேஸ்புக்', ‘டுவிட்டர்' வலைதளத்தில் முதன்முறையாக வெளியிடப்பட இருப்பதாக மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

English summary
To use social media for speedy dissemination of information on counting of votes, the Election Commission is for the first time set to post the counting and final results of elections in five states on its Facebook page and Twitter handle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X