பிரபாகரனை கடவுளாக, மீட்பராக போற்றிய தமிழர்கள்.. நார்வே மாஜி தூதர் எரிக் சொல்ஹெய்ம் சிலிர்ப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை கடவுளாக, மீட்பராக மக்கள் போற்றினர் என நார்வே முன்னாள் அமைச்சரும் சமாதான தூதராக இருந்தவருமான எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.

சர்வதேச தொலைக்காட்சி ஒன்றுக்கு எரிக் சொல்ஹெய்ம் அளித்த பேட்டி:

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை முதல் முறையாக நான் சந்திக்க சென்றபோது இலங்கையில் 2 பேருக்கு மட்டுமே தகவல் தெரியும். அப்போதைய அதிபராக இருந்த சந்திரிகா, வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த கதிர்காமர் இருவர் மட்டுமே அதை அறிந்திருந்தனர்.

ரகசிய சந்திப்பு

ரகசிய சந்திப்பு

இலங்கை ராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கும் கூட இது தெரியாது. சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்தே இச்சந்திப்பு வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது.

கடவுள், மீட்பர்

கடவுள், மீட்பர்

பிரபாகரனை தமிழ் மக்கள் கடவுளாக, மீட்பராக போற்றினர். அப்படி மக்கள் ஏன் போற்றினர்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

எச்சரிக்கையானவர்

எச்சரிக்கையானவர்

பிரபாகரனைப் பொறுத்தவரையில் கவர்ச்சிகரமான தலைவராக இருந்தார். அதேநேரதில் அதிக எச்சரிக்கையுடனும் செயல்பட்டார்.

வருத்தம்

வருத்தம்

பிரபாகரனுடன் அதிக நேரம் செலவிட முடியாமல் போனதற்காக வருத்தப்படுகிறேன். ஒருவேளை அப்படி பிரபாகரனுடன் அதிக நேரம் இருந்திருந்தால் என்னால் செல்வாக்கு செலுத்தியிருக்க முடியும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former Norwegian peace mediator Erik Solheim said that Tamils seen LTTE leader Vellupillai Prabhakaran as their god, creator, and saviour.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற