காஷ்மீரில் மாட்டு இறைச்சி விற்பனைக்கு அதிரடி தடை விதித்தது ஹைகோர்ட்- எதிர்ப்பு தெரிவித்து 'பந்த்"
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மாட்டு இறைச்சி விற்பனைக்கு அதிரடியாக தடை விதித்துள்ளது அம்மாநில உயர்நீதிமன்றம். ஆனால் இத்தடைக்கு எதிராக முழு அடைப்புப் போராட்டத்துக்கு பிரிவினைவாத இயக்கங்கள் அழைப்பு விடுத்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றத்தில் பரிம்கோஷ் சேத் என்ற வழக்கறிஞர் ஒரு பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்தார். அதில், பசுக்களை இறைச்சிக்காக கொல்லுதல் குற்றவியல் சட்டம் 298-ஏ மற்றும் பி-ன் கீழ் தண்டனைக்குரியது. எனவே காஷ்மீரில் மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இம் மனுவை விசாரித்த நீதிபதிகள் திரஜ் சிங் தாகூர், ஜனக்ராஜ் கோத்வால் ஆகியோரை கொண்ட பெஞ்ச், ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்குமாறும் இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் மாநில போலீசாருக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று உயர்நீதிமன்றத்தில் ஆஜரான மாநில போலீஸ் டிஜி.பி., மாட்டு இறைச்சி விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தி இருப்பதாக கூறினார்.
தடைக்கு எதிராக பந்த்
மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு எதிராக முழு அடைப்புப் போராட்டத்துக்கு பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications