செம்மரக் கடத்தலை தடுக்க... சேஷாசலம் வனப் பகுதியில் 144 தடை உத்தரவு!
ஹைதராபாத்: செம்மரங்களை வெட்டுவதற்காக சேஷாசலம் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப் படும் என ஆந்திர வனத்துறை எச்சரித்துள்ளது.
சர்வதேச அளவில் செம்மரக் கட்டைகளுக்கு அதிக கிராக்கி உள்ளது. எனவே, அவற்றை வனப்பகுதியில் இருந்து வெட்டி, கடத்திக் கொண்டு வர பல கும்பல் கூலியாட்களை வைத்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், செம்மரக் கடத்தலைத் தடுக்கும் வகையில் சேஷாசலம் வனப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. அதையும் மீறி அந்த வனப்பகுதிக்குள் நுழைபவர்கள் மீது, வனத்துறை பாதுகாப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், வனப்பகுதியில் அத்துமீறி நுழைபவர்களைக் கண்காணிக்கும் வகையில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் உள்ளதாகவும், அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப் பட்டுள்ளதாகவும் திருப்பதி வனத்துறை அதிகாரி ஸ்ரீனிவாசலு தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, ஆந்திர வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த பலரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications