திமுகவுக்கு 124 -140 இடங்கள்; அதிமுகவுக்கு 89- 101 இடங்கள்: இந்தியா டுடே- ஆக்சிஸ் எக்ஸிட் போல்
டெல்லி: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக 124 முதல் 140 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு உள்ளதாக இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே, சிஎன்என் நியூஸ் 18 சேனல்கள் தெரிவித்துள்ளன. அதிமுக 89 முதல் 101 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகள் தவிர 232 சட்டசபை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவு பிந்தைய கருத்துக்கணிப்பை இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் இன்று வெளியிட்டது. அதன்படி தமிழகத்தில் திமுக 124 முதல் 140 இடங்களில் வெல்லும் என்றும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
அதிமுக 89 முதல் 101 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், பாஜக 3 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் ஆக்சிஸ் - மை இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. பிற கட்சிகள் 4 முதல் 8 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
இதன்மூலம் அதிமுகவின் 5 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வருகிறது. திமுக ஆட்சி மீண்டும் உதிக்கிறது என்றும் இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளதாக
இந்தியா டுடே, சிஎன்என் நியூஸ் 18 சேனல்கள் தெரிவித்துள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications