லாலுவின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆபாச படத்தை போட்ட ஹேக்கர்ஸ்
பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக பீகார் துணை முஹ்ட்லவர் தேஜஸ்வி யாத்வ் புகார் கொடுத்துள்ளார்.
லாலு பிரசாத் யாதவின் குடும்பமே சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருகிறது. லாலுவின் ஃபேஸ்புக் (https://www.facebook.com/laluprasadrjd/?fref=ts) பக்கத்தில் தொடர்ச்சியாக அரசியல் கருத்துகள், பீகார் அரசின் செயல்பாடுகள் குறித்து பதிவிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பாட்னாவில் பீகார் துணை முதல்வரும் லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், லாலு பிரசாத் யாதவின் ஃபேஸ்புக் பக்கத்தை யாரோ சிலர் ஹேக் செய்து ஆபாசப் படங்களை பதிவிட்டு விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
தற்போது லாலு பிரசாத் யாதவின் ஃபேஸ்புக் பக்கத்தில் அவை நீக்கப்பட்டுள்ளன. இருப்பினும் போலீசார் ஹேக் செய்தது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
