For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சமூகச் சீர்திருத்தவாதி ஜோதிராவ் பூலேவுக்கு பாரத ரத்னா: மகா. முதல்வர் பட்னவிஸ் பரிந்துரை

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: சமூகச் சீர்திருத்தவாதி மறைந்த ஜோதிராவ் பூலேவுக்கும் அவரது மனைவியும் கல்வியாளருமான சாவித்ரிபாய் பூலேவுக்கும் பாரத ரத்னா விருது வழங்க மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பரிந்துரைத்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அனுப்பிய கடிதம்:

மகாத்மா ஜோதிராவ் பூலே மகாராஷ்டிரத்தில் நிகழ்ந்த சமூக சீர்திருத்தங்களுக்கு முக்கியப் பங்கு வகித்தவர். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவர்.

Fadnavis seeks Bharat Ratna for Jyotirao, Savitribai Phule

அவரது இந்த நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்தவர் அவரது மனைவி சாவித்ரிபாய் பூலே. சிறந்த கல்வியாளரான அவர், தீண்டாமைக்கு எதிரான சத்யசோதக் என்னும் போராட்டங்களில் முக்கியப் பங்காற்றியவர்.

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதைப் பெற இருவரும் தகுதியானவர்கள்.

இவ்வாறு பட்னவிஸ் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

English summary
Maharashtra Chief Minister Devendra Fadnavis has sought Bharat Ratna, the country's highest civilian award, for Savitribai and Mahatma Jyotirao Phule for their "extraordinary" contribution to the society.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X