For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

5 மாநில தேர்தல்... பாஜகவுக்கு எதிராக களமிறங்கிய விவசாயிகள்... சூறாவளி பிரச்சாரத்தால் கலகத்தில் பாஜக

Google Oneindia Tamil News

கொல்கத்தா: நந்திகிராம் தொகுதியில் இன்று நடைபெற்ற மகாபஞ்சாயத்து நிகழ்ச்சியில் பாஜகவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்த விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான கோஷத்தை எழுப்பினார்.

மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகத் தலைநகரில் கடந்த நவம்பர் மாதம் இறுதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் 100 நாட்களைக் கடந்தும் தொடர்கிறது.

அட! சென்னையில் 4 தொகுதிகளில் திமுக வெல்ல வாய்ப்பு?.. கிரவுண்ட் ரிப்போர்ட் சொல்வது என்ன? அட! சென்னையில் 4 தொகுதிகளில் திமுக வெல்ல வாய்ப்பு?.. கிரவுண்ட் ரிப்போர்ட் சொல்வது என்ன?

விவசாய சட்டங்களை ரத்து செய்யும் எண்ணம் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் ஐந்து மாநில தேர்தல்களில் பாஜகவுக்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளனர்.

விவசா தலைவர்கள் பிரச்சாரம்

விவசா தலைவர்கள் பிரச்சாரம்

முதல்கட்டமாக மேற்கு வங்க மாநிலத்தில் விவசாயிகள் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகாரம் தொகுதியில் விவசாயிகள் நேற்று பொதுக்கூட்டம் நடத்தினர். அப்போது விவசாயிகள் மத்தியில் பேசிய ராகேஷ் டிக்கைட், "நாங்கள் ஐந்து லட்சம் விவசாயிகள் சுமார் 110 நாட்களாக, டெல்லியின் எல்லையில் போராட்டம் நடத்தி வருகிறோம்.

திரிணாமுல் காங்கிரஸ்

திரிணாமுல் காங்கிரஸ்

டெல்லி எல்லையில் சாலைகளில் நிரந்தர வீடுகளையும் நாங்கள் கட்ட தொடங்கிவிட்டோம். ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர்ந்து போராடுவதைக்கூட மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், இப்படியொரு அரசு வங்காளத்தில் ஆட்சி அமைத்தால் என்ன நடக்கும் என்று சந்தித்துப் பாருங்கள்" என்றார். மேலும், அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சில கோஷங்களையும் எழுப்பினார்,

பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்

பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்

தொடர்ந்து பேசிய அவர், "இது வங்காள மக்களுக்கு எனது செய்தி. பாஜக தலைமையிலான மத்திய அரசு நாட்டை கொள்ளையடிக்கிறது. அவர்களுக்கு யாரும் வாக்களிக்கக் கூடாது. வாக்கு கேட்டு வந்தால், நீங்கள் அவர்களிடம் குறைந்தபட்ச ஆதரவு விலை எப்போது கிடைக்கும் என்று கேளுங்கள். எனவே சிந்தித்து வாக்களியுங்கள்" என்று ராகேஷ் டிக்கைட் பேசினார். விவசாய தலைவர்கள் பாஜகவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய தொடங்கியுள்ளது மேற்கு வங்கம் மாநிலத்திலுள்ள அக்கட்சித் தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலம் முழுவதும் பிரச்சாரம்

மாநிலம் முழுவதும் பிரச்சாரம்

மேலும், மம்தா காயமடைந்துள்ளது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டார். முதல்கட்டமாக மேற்கு வங்கம் மாநிலம் முழுவதும் பாஜகவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வேன் என்றும் அவர் தெரிவித்தார். இருப்பினும், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களியுங்கள் என்று பொதுமக்களிடம் ஒருபோதும் கேட்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

English summary
Farmer Leader Rakesh Tikait campaigns in West Bengal not to vote for BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X