For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆன்லைன் கொள்முதலில் மோசடி.. ஹைதராபாத்தில் கொள்முதல் அலுவலகத்தை சூறையாடிய விவசாயிகள்

ஹைதராபாத்தில் ஆன் லைன் கொள்முதல் சந்தையில் விவசாயிகள் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவியது.

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: விலை நிர்ணயத்தில் ஏமாற்றப்படுவதாகக் கூறி ஆன் லைன் கொள்முதல் சந்தை அலுவலகம் மீது விவசாயிகள் தாக்கியதால் ஹைதராபாத்தில் பதற்றம் நிலவியது.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆன்லைன் கொள்முதல் முறையில் தாங்கள் ஏமாற்றப்படுவதாக புகார் தெரிவித்த விவசாயிகள், சந்தை மையத்தில் உள்ள அலுவலகத்தை தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.ஹைதராபாத்தின் மலக்பேட் பகுதியில் பிரபலமான மிளகாய் மற்றும் வெங்காய சந்தை உள்ளது. சமீபத்தில் இங்கு ஆன்லைன் கொள்முதல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Farmers attack market yard in Hyderabad over online procurement

ஆனால் இந்த முறையின் மூலமாக தாங்கள் ஏமாற்றபப்டுவதகவும், தங்களுடைய விலை பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதைல்லை என்றும் விவசாயிகள் புகார் கூறினார். மேலும், ஆன் லைன் சந்தையை தடுக்க கோரி விவசாயிகள் முழக்கம் எழுப்பினர்.

இதில் தாங்கள் ஏமாற்றப்படுவதாக அதிர்ச்சியடைந்த விவசாயிகள், சந்தை வளாகத்தில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் அங்கிருந்த சாமான்களை திடீரென உடைத்ததால், பதற்றம் உண்டானது.

ஆனால் விவசாயிகளின் இந்த புகாரை அதிகாரிகள் மறுத்தனர். ஆன்லைன் கொள்முதல் நடைமுறை வெளிப்படையாக நடைபெறுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

சந்தை அலுவலகம் மீது விவசாயிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவியது. ஆன் லைன் கொள்முதலால் தங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். கடந்த வாரமே எலக்ட்ரானிக் எடை மெஷின் உள்ளிட்ட ஆன் லைன் வர்த்தக நடைமுறைகள் அந்த சந்தையில் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ரூபாய் நோட்டு பிரச்னையால் போதிய வியாபாரம் இல்லாத நிலையில் விவசாயிகள் சந்தை மீது தாக்குதல் நடத்திய சம்பவம் வியாபாரிகளிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விவசாயிகளை சமதானப்படுத்தினர்.

English summary
Hyderabad: Farmers attacked the office of a market yard in Hyderabad on Thursday, alleging that they were being cheated through the online procurement system that was recently introduced.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X