தெலுங்கானா ஶ்ரீசைலம் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து.. 9 பேர் பலி.. 6 பேரின் உடல் மீட்பு!
ஶ்ரீசைலம்: தெலுங்கானா மாநிலம் ஶ்ரீசைலம் மின் உற்பத்தி நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் 9 பேர் பலியானதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதில் 6 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது, இன்னும் 3 பேரின் உடல் மீட்கப்படவில்லை.
Recommended Video
தெலுங்கானா ஶ்ரீசைலம் அணையின் இடதுகரையில் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் பயங்கர வெடி சப்தம் கேட்டது.

இதனையடுத்து மின்நிலையம் தீப்பிடித்து எரிந்தது. அப்போது இரவுப் பணியில் பணியாளர்கள் இருந்தனர். உடனடியாக தீயை அணைக்கும் பணிகளும் மீட்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இன்று மாலை வரை மொத்தம் 6 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 9 பேர் பலியாகி உள்ளனர். உள்ளே சிக்கி பலியான 9 பேரில், 6 பேர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர். இன்னும் 3 பேரை மீட்கவில்லை. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஶ்ரீசைலம் அணையானது கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணைதான் ஆந்திராவையும் தெலுங்கானாவையும் பிரிக்கிறது. தீ விபத்தின் போது தெலுங்கானா பொறியாளர்கள் பணியில் இருந்தனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications