கொல்கத்தாவில் கிடங்கில் தீ.. இரவு முழுக்க பற்றி எரிந்த நெருப்பு.. 15 மணிநேரத்துக்கு பின் அணைப்பு
கொல்கத்தா: மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவின் டாங்கிரா பகுதியில் உள்ள குடோனில் ஏற்பட்ட தீ விபத்து கடும் போராட்டத்துக்கு பின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
நேற்று மாலை டாங்கிராவில் உள்ள மெஹ்ர் அலி வீதியில் அமைந்திருக்கும் சேமிப்பு கிடங்கில் சிறிய அளவில் ஏற்பட்ட தீ விபத்து மளமளவென கட்டிடம் முழுவதும் பரவத் தொடங்கியது. தகவலறிந்து 15 வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த பல மணி நேரமாக போராடினர்.

2 தீயணைப்பு வீரர்களுக்கு காயம்
நேற்று நள்ளிரவு முழுவதும் போராடியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறை தடுமாறியது. இதுகுறித்து தெரிவித்த மண்டல தீயணைப்புத்துறை அதிகாரி தேப்தானு கோஷ், "10 மணி நேரமாகியும் எங்களால் தீயை அணைக்க முடியவில்லை. சேமிப்பு கிடங்கில் தீயை ஏற்படுத்தும் எரியக்கூடிய பொருட்களான செயற்கை தோல், வேதிப் பொருட்கள், கற்பூர எண்ணெய், மது போன்றவை இருப்பதால் எங்களால் உள்ளே செல்ல முடியவில்லை. தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த 2 வீரர்களுக்கு தீ காயங்கள் ஏற்பட்டு உள்ளன.

12 மணி நேரமாகியும் அணையாத தீ
இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கின்றனர்." என்றார். 12 மணி நேரம் கழித்து ஒரு பகுதியில் தீயை கட்டுப்படுத்திய தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், கட்டிடத்தில் எரியக்கூடிய பொருட்கள் அதிகம் இருந்ததால் தீயணைப்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வரும் வீரர்களுக்கு அப்பகுதி மக்களும் தேவையான உதவிகளை செய்தனர்.

மேற்கு வங்க அமைச்சர் விளக்கம்
தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு சென்ற மாநில தீ மற்றும் அவசர உதவித்துறை அமைச்சர் சுஜித் போஸ், "விபத்து ஏற்பட்ட குடோன் அமைந்துள்ள பாதை மிகவும் குறுகலானது. இப்பகுதியில் தீயை கட்டுப்படுத்துவது என்பது தீயணைப்பு படையினருக்கு சவாலான காரியம்." என்றார். பல மணி நேர மீட்புப் பணி காரணமாக தீயணைப்பு வாகனத்தின் டேங்கில் இருந்த தண்ணீர் காலியானது.

எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு
அவர்களுக்கு வாலிகளில் தண்ணீர் எடுத்து வந்து பொதுமக்கள் தீயை கட்டுப்படுத்த உதவி செய்தனர். அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவரும் மாநில பாஜக தலைவருமான சுவேந்து அதிகரி, தீயணைப்பு மற்றும் அவசர உதவித் துறையின் ஆற்றல் மம்தா பானர்ஜியின் ஆட்சியில் குறைந்துவிட்டது என குற்றம்சாட்டினார்.

15 மணி நேரம் கழித்து தீ அணைப்பு
ஒருவழியாக 15 மணி நேர தீவிர போராட்டத்துக்கு பிறகு தீயை முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருப்பதாக அம்மாநில தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. இதில் பல கோடி மதிப்பில் பொருட்சேதம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications