ஒரே பதவி.. ஒரே ஓய்வூதியம் என்பது போல.. காங்கிரசில் ஒரே ராகுல், ஒரே பிரியங்கா… அமித் ஷா கிண்டல்
Recommended Video

ஹமீர்புர்:காங்கிரசை பொறுத்தவரை ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்றால் ஒரே ராகுல், ஒரே பிரியங்கா என்று பாஜக தலைவர் அமித் ஷா கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இந்திய பாதுகாப்புப் படைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற வீரர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது முன்னாள் ராணுவத்தினரின் 43 ஆண்டு கால கோரிக்கையாகும். அந்த திட்டம் பாஜக அரசால் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பரில் அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ராணுவ வீரர்கள் அதிகம் உள்ள ஹமிர்பூரில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பாஜக சார்பில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப் பட்டு இருந்தது. அதில் கலந்துகொண்டு பாஜக தலைவர் அமித் ஷா பேசியதாவது:மோடி அரசு, முன்னாள் ராணுவ வீரர்களுக்காக ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது.
कांग्रेस के लिए #OROP का मतलब है Only Rahul, Only Priyanka : श्री अमित शाह #HimachalWithBJP pic.twitter.com/IEj3hH5uoA
— BJP (@BJP4India) January 28, 2019
இப்போதெல்லாம் ராகுல் காந்தி வறுமை குறித்து அதிகம் பேசுகிறார். அவரிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். பல்லாண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் ஏன் வறுமையை ஒழிக்கவில்லை?
70 ஆண்டுகளாக ராணுவ வீரர்களைக் குறித்து அவர்கள் கவலைப்படவில்லை. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்ததும் ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தினார்.
भाजपा का हर एक पन्ना प्रमुख 'मेरा बूथ- सबसे मजबूत' के संकल्प के साथ प्रधानमंत्री श्री @narendramodi जी को एक प्रचंड बहुमत से पुनः प्रधानमंत्री बनाने के लिए कटिबद्ध है। pic.twitter.com/v0XYfAZn8y
— Amit Shah (@AmitShah) January 28, 2019
காங்கிரசை பொறுத்தவரை ஓஆர்ஓபி எனப்படும் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்றால் ஒரே ராகுல், ஒரே பிரியங்கா. பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டத்தை நிறைவேற்ற பாடுபடும் நிலையில் ராகுல் பிரேக் இன் இந்தியா திட்டத்தை செயல்படுத்த முனைகிறார் என்றார் அமித் ஷா.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் மகளும் கட்சியின் தலைவர் ராகுலின் சகோதரியுமான பிரியங்காவை அகில இந்திய காங்கிரஸின் பொதுச் செயலாளராக கட்சித் தலைவர் ராகுல் காந்தி நியமித்தார்.
பிரியங்கா நேரடி அரசியலுக்கு வந்துள்ளதன் மூலம் ராகுல் மற்றும் பிரியங்காவை கடுமையாக பாஜக தாக்கி பேசி வருகிறது. அதன் ஒரு வடிவம் தான் அமித் ஷா இந்த நிகழ்ச்சியில் பேசியது என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா?












Click it and Unblock the Notifications