சிறுமியின் உள்ளாடையை அனுமதி இன்றி அகற்றுவது.. பலாத்காரத்திற்கு இணையான குற்றம்.. ஹைகோர்ட் அதிரடி
கொல்கத்தா நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் நான் அந்த சிறுமியை பலாத்காரம் செய்யவில்லை. மெடிக்கல் ரிப்போர்ட் இதை உறுதி செய்து உள்ளது, என்று குற்றவாளி வாதம் வைத்தார்.
கொல்கத்தா: சிறுமியின் உள்ளாடையை அவரின் அனுமதி இன்றி அகற்றுவது பலாத்காரத்திற்கு இணையான குற்றம் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
சிறுமி ஒருவர் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 2007ம் ஆண்டு இந்த சம்பவம் நடைபெற்றது. சிறுமி ஒருவரை ராபி ராய் என்ற இளைஞர் தனியான இடத்திற்கு அழைத்து சென்று அவரின் உள்ளாடையை கழற்ற சொல்லி இருக்கிறார்.
மைனர் என்பதால் அந்த சிறுமியின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. உலகம் முழுக்க பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக பெரு நகரங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதை விட அதிக வன்முறைகளை எதிர்கொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது. சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் மைனர் சிறுமிகளுக்கு எதிராகவும் கூட பல்வேறு கொடுமைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

மைனர்
இந்த நிலையில் கொல்கத்தாவில் கடந்த 2007ம் ஆண்டு, மே 7 அன்று தனியாக சாலையில் சென்று கொண்டு இருந்த சிறுமியை பேசி, பாலம் ஒன்றிற்கு கீழே கொண்டு சென்று அவரின் உள்ளாடையை கழற்ற சொல்லி இருக்கிறார். முதலில் அந்த சிறுமி மறுத்துள்ளார். ஆனால் தொடர்ந்து அவரின் கீழாடையை கழற்றும் படி கூறி ராபி ராய் வற்புறுத்தி உள்ளார். இதை கேட்காமல் அந்த சிறுமி கண்ணீர்விட்டு கதறி அழுது உள்ளார். இதை கேட்டதும் ராபி ராய் அந்த சிறுமியின் வாயை மூடிவிட்டு, அவரின் உடையை கழற்றி உள்ளார். சிறுமியின் கீழாடையை கழற்றி உள்ளார்.

உள்ளாடை
அதன்பின் அவரின் உள்ளாடையையும் கழற்றி உள்ளார். இதையடுத்து அந்த சிறுமி வாயை மூடி இருந்த கையை அகற்றிவிட்டு கதறி கத்தி உள்ளார். இதை கேட்டதும் அருகில் இருந்த சிலர் அங்கே ஓடி வந்துள்ளனர். மக்கள் பலர் அங்கே மொத்தமாக சூழ்ந்து உள்ளனர். இதையடுத்து ராபி அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்றார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ராபியை கைது செய்தனர். இதையடுத்து கீழமை கோர்ட் இதில் வழங்கிய தீர்ப்பில் ராபிக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

அபராதம்
3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதோடு அந்த சிறுமி சார்பாக ராபியை எதிர்த்து இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நடந்த விசாரணையில் நான் அந்த சிறுமியை பலாத்காரம் செய்யவில்லை. மெடிக்கல் ரிப்போர்ட் இதை உறுதி செய்து உள்ளது. அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்படவில்லை என்று வாதம் வைத்தார். அப்படி இருக்கும் போது இதை பலாத்காரமாக கருத கூடாது என்று வாதம் வைத்தார்.

எதிர் வாதம்
அந்த சிறுமி தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், ராபி காரணமாக அந்த சிறுமி மன ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளார். மன ரீதியாக அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார். இதனால் அவருக்கு எதிரான தண்டனையை நீக்க கூடாது என்று வாதம் வைக்கப்பட்டது. இந்த வழக்கில் கொல்கத்தா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சிறுமியின் உள்ளாடையை அவரின் அனுமதி இன்றி அகற்றுவது பலாத்காரத்திற்கு இணையான குற்றம். அதனால் இந்த தண்டனையை நீக்க முடியாது என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications