Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

12 ஆண்டுக்கு பின்.. நெருங்கி வந்த பாகிஸ்தான் அமைச்சர்! கோவாவில் புறக்கணித்த ஜெய்சங்கர்.. ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

பனாஜி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக 12 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலவால் பூட்டோ ஜார்தாரி இந்தியா வந்த நிலையில் தீவிரவாத செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நம் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்த சம்பவம் நடந்தது.

உலகில் பல நாடுகள் தங்களின் பிராந்தியங்களின் பாதுகாப்புக்காக பல நாடுகளை இணைந்து தனி அமைப்புகளை உருவாக்கி உள்ளன. அவ்வாறு உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு தான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு. இது கடந்த 2001ல் தொடங்கப்பட்டது.

Foreign affair minster Jaishankar no shake hand with Pakistan minister Bilawal Bhutto Zardari at SCO meet in Goa

இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. மேலும் ஈரான், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், மங்கோலியா ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன.

Recommended Video

    Jaishankar VS Pakistan Minister Bilawal | இதுக்கு எதுக்கு India வந்துகிட்டு? | திருந்தாத Pakistan

    இந்த நாடுகள் தங்களுக்கு இடையேயான அரசியல், பொருளாதாரம், சர்வதேச பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கும். இந்நிலையில் தான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் 2 நாள் மாநாடு இந்தியாவின் கோவாவில் நேற்று தொடங்கியது.

    இதில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாரவ், சீன வெளியுறவு அமைச்சர் சின் காங் வந்தனர். மேலும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ இந்தியா வந்தார். கடந்த 2011ம் ஆண்டில் அப்போதைய பாகிஸ்தான் அமைச்சர் ஹினா ரபானி இந்தியாவுக்கு வந்த நிலையில் அதன்பிறகு யாரும் வரவில்லை. இந்நிலையில் தான் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதைய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் இந்தியா வந்துள்ளார்.

    இந்நிலையில் தான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாட்டுக்கு வந்த அமைச்சர்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார். பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோவையும், ஜெய்சங்கரை நோக்கி நெருங்கி நடந்து வந்தார். அப்போது அவரை ஜெய்சங்கர் கைகளை கூப்பி வரவேற்றார்.

    Foreign affair minster Jaishankar no shake hand with Pakistan minister Bilawal Bhutto Zardari at SCO meet in Goa

    மாறாக ஜெய்சங்கர், பிலாவல் பூட்டோவிடம் கைகளை குலுக்கி வரவேற்க மறுத்தார். பொதுவாக இருநாடுகளின் அமைச்சர்கள், முக்கிய பொறுப்பில் இருக்கும் பிரதிநிதிகள் தங்களிடையே நல்ல உறவு என்பதை வெளிப்படுத்தும் வகையில் கைகள் குலுக்குவதும், லேசாக கட்டித்தழுவி கொள்வதும் வழக்கமான ஒன்றாக உள்ளது. ஆனால் ஜெய்சங்கர் அப்படி எதையும் செய்யவில்லை. இதுதொடர்பான வீடியோ வெளியாகி விவாதத்தை கிளப்பியது.

    இந்நிலையில் தான் ஜெய்சங்கர் ஏன் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோவுக்கு கைகுலுக்கவில்லை என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இதனை பலமுறை இந்தியா கைவிட கூறியும் பாகிஸ்தான் கேட்வில்லை.

    மேலும் பதான்கோட் தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணமாக இருந்தது. அதோடு தொடர்ந்து காஷ்மீரில் பிரச்சனையை பாகிஸ்தான் கிளறி வருகிறது. இதுபோன்ற காரணங்களால் தான் ஜெய்சங்கர், பிலாவல் பூட்டோவிடம் கைகுலுக்காமல் அவரை புறக்கணித்தார். இருப்பினும் ஷாங்காய் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு இந்தியாவில் நடப்பதால் நாகரீகம் கருதி கைகூப்பி வரவேற்றார் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+