படம் ஒரே பொய்“தி காஷ்மீர் பைல்ஸ்” படத்தை கடுமையாக சாடும் உமர் அப்துல்லா..அப்போ பிரதமர் யார் தெரியுமா
ஸ்ரீநகர் : 1990ஆம் ஆண்டில் காஷ்மீரில் இருந்து காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் பல பொய்யான விஷயங்கள் காட்டப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.
இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'. 1990-களில் காஷ்மீரில் வெளியேற்றப்பட்ட இந்துக்கள் குறித்த உண்மை சம்பவத்தை தழுவிய கதையம்சம் கொண்ட திரைப்படம் என கூறப்படுகிறது.

தி காஷ்மீர் பைல்ஸ் படம்
" தி காஷ்மீர் பைல்ஸ்" திரைப்படம் கடந்த 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், பிரதமர் நரேந்திர மோடி உட்பட அரசியல் தலைவர்கள், பல்வேறு பிரபலங்கள் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.
1990ஆம் ஆண்டின் முற்பகுதியில் காஷ்மீரி பண்டிட்டுகள் சமூகத்தை சேர்ந்தவர்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுக்களால் குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்ட பிறகு அவர்கள் மாநிலத்திலிருந்து வெளியேறியதாக படத்தின் கரு அமைக்கப்பட்டுள்ளது. விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ள தி காஷ்மீர் பைல்ச் படத்திற்கு பாஜக ஆளும் மாநிலங்களில் வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களில் அச்சுறுத்தல்கள்
அனுபம் கெர், பல்லவி ஜோஷி, மிதுன் சக்ரவர்த்தி மற்றும் தர்ஷன் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த திரைப்படம், சமூகத்தின் சில பிரிவினர்களில், வகுப்பு வாத பிரச்சாரத்தை மேற்கொள்ளவதாக எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் ஏற்கனவே இப்படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள நிலையில், பல ஆண்டுகளாக மறைக்கப்பட்ட உண்மையை வெளியே கொண்டு வரும் படத்தை அவமதிப்பதாக பாஜக மற்றும் இந்துத்வா அமைப்புகள் கூறி வருகின்றன. இந்நிலையில் படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரிக்கு சமூக ஊடகங்களில் அச்சுறுத்தல்கள் வந்ததால் அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

உமர் அப்துல்லா கண்டனம்
இந்நிலையில் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தில் பல பொய்யான விஷயங்கள் காட்டப்பட்டுள்ளன எனவும், தி காஷ்மீர் பைல்ஸ் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பல உண்மைகளை திரித்துள்ளனர் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார். இது ஆவணப்படமா அல்லது படமா என்பதை தயாரிப்பாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும். இது ஒரு ஆவணப்படம் என்றால், எதைக் காட்டினாலும் அது உண்மையாக இருக்க வேண்டும், ஆனால் தயாரிப்பாளர்கள் இது யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்ட படம் என்று கூறுகிறார்கள், தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் பல பொய்யான விஷயங்கள் காட்டப்பட்டுள்ளன என உமர் அபதுல்லா கூறியுள்ளார்.

காஷ்மீர் பண்டிட்டுகள்
காஷ்மீர் பண்டிட்டுகள் காஷ்மீரை விட்டு வெளியேறியபோது, ஃபரூக் அப்துல்லா முதல்வராக இல்லை. ஜம்மு காஷ்மீர் கவர்னராக இருந்தவர் ஜக்மோகன். வி.பி. சிங்கின் அரசாங்கம் மத்தியில் பாஜக ஆதரவுடன் இருந்தது எனக் கூறியுள்ள உமர் அப்துல்லா, படத்தில் விபி சிங்கின் அரசு மற்றும் பாஜகவை ஏன் காட்டவில்லை என கேள்வி எழுப்பியுள்ளதோடு, உண்மைகளுடன் விளையாடுவது சரியல்ல. காஷ்மீர் பண்டிட்டுகளின் கொலையை கண்டிக்கிறோம். ஆனால் காஷ்மீரி முஸ்லிம்களும் சீக்கியர்களும் உயிரை இழக்கவில்லையா எனவும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

கலாச்சாரத்தின் மீது ஒரு கறை
ட்விட்டரிலும் தனது கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ள உமர் அப்துல்லா, "1990 மற்றும் அதற்குப் பிறகு ஏற்பட்ட வலி மற்றும் துன்பங்களைத் திரும்பப் பெற முடியாது. காஷ்மீரி பண்டிட்கள் அவர்களின் பாதுகாப்பு உணர்வை அவர்களிடமிருந்து பறித்து, பள்ளத்தாக்கை விட்டு வெளியேற வேண்டிய விதம் காஷ்மீரியத்தின் கலாச்சாரத்தின் மீது ஒரு கறை. பிளவுகளைக் குணப்படுத்துவதற்கான வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும் மற்றும் அவற்றைச் சேர்க்கக்கூடாது." என கூறியுள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications