பாஜகவில் இணைகிறார் ஜார்க்கண்ட் Ex முதல்வர் சம்பாய் சோரன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! நள்ளிரவில் பரபர
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஆளும் ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவருமான சம்பாய் சோரன் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி பாஜகவில் இணைகிறார். இதை அசாம் முதல்வரும் ஜார்கண்ட் பாஜக தேர்தல் பொறுப்பாளருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா உறுதி செய்துள்ளார்.
ஜார்க்கண்ட்டில் இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே அங்கே திடீர் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் கடந்த பிப். மாதம் நிலமோசடி வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றார்.

அப்போது ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் முதல்வராகப் பதவியேற்றார். சுமார் 5 மாதங்கள் அவர் முதல்வராக இருந்தார். ஹேமந்த் சோரனுக்கு கடந்த ஜூன் இறுதியில் ஜாமீன் கிடைத்த நிலையில், சம்பாய் சோரன் தனது முதல்வர் பதவியில் இருந்து சம்பை விலக வேண்டியிருந்தது. இருப்பினும், அப்போது நடந்த சில விஷயங்கள் தன்னை காயப்படுத்தியதாகச் சம்பாய் சோரன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும், டெல்லி சென்று அவர் பாஜக தலைவர்களையும் சமீபத்தில் சந்தித்திருந்தார். இப்போதே அவர் பாஜகவில் இணையலாம் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், அப்போது அவர் இணையவில்லை. . கட்சித் தலைமை தன்னை அவமானப்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டிய சம்பாய் சோரன், அரசியலில் இருந்து விலகுவது, புதிய கட்சி தொடங்குவது அல்லது வேறு கட்சியில் சேருவது ஆகிய 3 ஆப்ஷன்கள் இருப்பதாக அவர் கூறியிருந்தார்.
இதற்கிடையே ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஆளும் ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவருமான சம்பாய் சோரன் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி பாஜகவில் இணைகிறார். இதை அசாம் முதல்வரும் ஜார்கண்ட் பாஜக தேர்தல் பொறுப்பாளருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா உறுதி செய்துள்ளார்.
67 வயதான சாம்பாய் சோரன் திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது ஹிமந்தா பிஸ்வா சர்மா உடனிருந்தார். இது தொடர்பான புகைப்படத்தைப் பகிர்ந்த ஹிமந்தா பிஸ்வா சர்மா, "ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், புகழ்பெற்ற பழங்குடியின தலைவருமான சாம்பாய் சோரன் சற்று நேரத்திற்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அவர் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி ராஞ்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைவார்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications