கேரளா நீர்வீழ்ச்சியில் குளித்த 2 தமிழர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அச்சன்கோயில்: அச்சன்கோயில் பகுதியிலுள்ள கும்பாவுருட்டி நீர் வீழ்ச்சியில் மூழ்கி தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா, அச்சன்கோயில் பகுதியில் மழை பெய்து வருவதால் அச்சன் கோயிலாறு, கும்பாவுருட்டி நீர்வீழ்ச்சி ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. வருடம்தோறும் தென்மேற்கு பருவமழை பெய்யும்போது இப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவது அடிக்கடி நிகழும்.

Four members died in Kumbavurutti falls when they fell into water

கும்பாவுருட்டி நீர்வீழ்ச்சியில் குளிக்க தூத்துக்குடியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சென்றனர். அருவியில் நீராடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிய 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் வார விடுமுறை என்பதால் கேரளாவுக்குச் சுற்றுலா சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Kerala kumbavurutti falls 4 members died when they fell down in water and they belong to Tuticorin.
Please Wait while comments are loading...