For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒடிசாவில் தொடரும் சோகம்: 24 மணி நேரத்தில் 4 விவசாயிகள் தற்கொலை !

By Karthikeyan
Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 4 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

four more farmers commited suicide in odisha

தற்கொலை செய்து கொண்டவர்களில் 3 பேர் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், ஒருவர் நுபடா மாவட்டத்தைச் சேர்ந்தவர். 4 விவசாயிகளும், வெறும் வயிற்றில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதேபோல் கடந்த திங்கள்கிழமை இரண்டு விவசாயிகள் விஷம் அருந்தி கட்டாக் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

இந்நிலையில், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்களை முதல்வர் மந்திரி நவீன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, ஒடிசாவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1,000 கோடி ரூபாய்க்கு சலுகைகளை முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
At least four more farmers allegedly committed suicide within last 24 hours, in odisha
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X